ஐடி ரெய்டில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா... கணக்கில் வராத ரொக்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்
முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் இவர் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

ராஷ்மிகா மந்தனா
- News18 Tamil
- Last Updated: January 18, 2020, 9:11 AM IST
நடிகை ராஷ்மிகா மந்தனா வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.
மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘டியர் கம்ரேட்’, மகேஷ் பாபுவுடன் ‘சரிலேரு நீக்கெவரு’ படத்திலும் நடித்திருந்த ராஷ்மிகா தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கார்த்தியை வைத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார்.
முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் இவர் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், அதனை பணமாக பெற்றுக்கொள்வதாகவும், அதற்கு முறையாக வரி செலுத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குடகு மாவட்டத்தில் உள்ள ராஷ்மிகா மந்தனாவின் பெங்களூரு வீட்டில் கடந்த ஜனவரி 16ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலை 7.30 மணியில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் ராஷ்மிகா மந்தனா வீட்டில் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.