ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் தர்பார் படக்குழு: டபுள் ஆக்‌ஷனில் ரஜினி?

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் தர்பார் படக்குழு: டபுள் ஆக்‌ஷனில் ரஜினி?

தர்பார் பட போஸ்டர்

தர்பார் பட போஸ்டர்

தர்பார் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தர்பார் படத்தில் ரஜினிகாந்த்  2 வேடங்களில் நடிப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் தர்பார். 2.0 படத்தை அடுத்து மீண்டும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகிறார் நயன்தாரா. பேட்ட படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த அனிருத் தர்பார் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். முழுக்க முழுக்க காவல்துறை பின்னணியில் நடைபெறும் கதைக்களம் என்பதை இப்படத்தின் போஸ்டர் வெளிப்படுத்துகிறது.

தர்பார் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்  தர்பார் படத்தில் ரஜினிகாந்த் 2 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு கதாபாத்திரம் மும்பையை மிரட்டும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக சித்தரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னொரு வேடம் பாட்சா போன்று தாதாவாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது. இந்த கதாப்பாத்திரத்தின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரங்களில் வெளியாகியுள்ளது. ஆனால்  படக்குழுவினர் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Also see...

First published:

Tags: Darbar, Director ar murugadoss, Rajini Kanth