இரண்டு பாகமாக வெளியாகும் அல்லு அர்ஜுன், பகத் பாசில் படம்...!

அல்லு அர்ஜுன்

தசராவை முன்னிட்டு அக்டோபரில் புஷ்பாவை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன் இரண்டாம் பாகம் 2022 கோடையில் வெளியாகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தின் புஷ்பா ராஜ் அறிமுக டீஸர் சில வாரங்கள் முன்பு வெளியானது. குறுகிய காலத்தில் அதிக பார்வைகள், அதிக லைக்குகள் என்று டீஸர் சாதனைகள் பல படைத்தது. அந்த புஷ்பா படம் இரு பாகங்களாக வெளியாகிறது.

புஷ்பா படத்தின் டீஸரிலிருந்து, அல்லு அர்ஜுன் செம்மர கடத்தல்காரராக நடிப்பதாக யூகிக்க முடிகிறது. இந்த பிரமாண்ட ஆக்ஷன் படத்தில் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவரது முதல் தெலுங்குப் படம் இது. ராஷ்மிகா மந்தனா நாயகி. சுகுமார் படத்தை இயக்குகிறார். படத்தை பிரேம் பை பிரேம் இழைப்பவர் சுகுமார் என்பது முக்கியமானது.

Also read... அண்ணாத்த... வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த்!

புஷ்பா படம் இரு பாகங்களாக வெளியாகும் என்ற தகவல் கசிந்த போது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால், படத்தின் கதை பெரியது. அதனை இரண்டரை மணி நேரத்தில் சொல்வது கடினம். அதனால், இரு பாகங்களாக வெளியிடுவது என்று இயக்குனரும், அல்லு அர்ஜுனும் முடிவு செய்துள்ளனர். முதல் பாகம் முடிந்த பிறகு இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு தொடங்கும். இப்போதே இரண்டாம் பாகத்தின் 10 சதவீத காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டது என படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரவி சங்கர் கூறியுள்ளார்.

தசராவை முன்னிட்டு அக்டோபரில் புஷ்பாவை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன் இரண்டாம் பாகம் 2022 கோடையில் வெளியாகும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: