பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு ட்ரக்யாஸ்டமி சிகிச்சை
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு ட்ரக்யாஸ்டமி சிகிச்சை
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவிட்ட நிலையில், பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு டிரக்கியோஸ்டமி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் SP பாலசுப்புரமணியம்.
கொரொனா தொற்று கடுமையாக நுரையீரலை தாக்கி செயலிலக்கும் நிலைக்கு சென்றதால் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதியில் இருந்து செயற்கை சுவாசமும், எக்மோ சிகிச்சையும் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தொண்டையில் துளையிட்டு டிரக்கியோஸ்டமி கருவி பொருத்தப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.