இயக்குனர் ஷங்கர் படத்தில் கொரிய நடிகை...?

இயக்குநர் ஷங்கர்

Suzy Bae நடிகை, மாடல். வேகாபாண்ட் போன்ற கொரியாவின் முக்கிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பஞ்சாயத்துகள் நடுவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். ஒருபக்கம் இந்தியன் 2 வழக்கு. மறுபுறம் அந்நியன் இந்தி ரீமேக் சர்ச்சை. இந்த இரண்டுக்கும் நடுவில் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு - தமிழ் - இந்தி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர். 

இன்னும் பெயரிடப்படாத இந்த மும்மொழிப் படத்தை தில் ராஜு, ஷ்ரிஷ் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். சிரஞ்சீவி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் உள்ளது. இந்நிலையில், கன்னட நடிகர் சுதீப்பை அணுகி கதை சொல்லியிருக்கிறார்கள். சுதீப் முக்கிய வேடத்தில் இதில் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், சுதீப் நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை.

அதேபோல் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்ட கொரிய நடிகை Suzy Bae இதில் நடிக்கயிருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. Suzy Bae நடிகை, மாடல். வேகாபாண்ட் போன்ற கொரியாவின் முக்கிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். சில படங்களிலும் தலைகாட்டியுள்ளார். இவரும் ராம் சரண் படத்தில் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

Also read... இரண்டு மொழிகளில் வெளியாகும் சோனியா அகர்வாலின் ஹாரர் படம்...!

இந்தியன் 2 பஞ்சாயத்து சுமூகமாக முடியாதபட்சத்தில், ராம் சரண் படத்தை இயக்குனர் ஷங்கர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: