மீண்டும் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இதில் எந்த மாதிரியான கெட்அப்பில் வருவார் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
தயாரிப்பாளர் போனி கபூருடன் நிற்கும் இந்த புகைப்படம் மும்பையில் உள்ள போனி கபூர் அலுவலகத்தில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே கெட்அப்பில்தான் தனது அடுத்த படத்தில் அஜித் நடிப்பார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.
வலிமை படத்தின் பூஜையின்போதே, படத்தின் டைட்டில் இதுதான் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே ஸ்டைலில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலும் பூஜை அன்றே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read also :
பிக் பாஸ் குழுவால் அவமதிக்கப்பட்டாரா ஆரி? பிக் பாஸ் 5 இறுதி நிகழ்ச்சியில் நடந்தது என்ன?
நேர்கொண்ட பார்வை படத்தில், அஜித் தனது இயல்பு வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ அதே கெட் அப்பில்தான் நடித்திருந்தார். வலிமை படத்தில் சற்று மாற்றமாக ஹேர் கலரிங், ஃபிட் லுக், மீசையில்லாத தோற்றம் என வந்து, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அஜித்தின் அடுத்த படத்துடைய கதை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் இசையமைப்பாளர் யுவனுக்கு பதிலாக அனிருத் இந்த படத்தில் இணைகிறார் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read also :
இதையும் படிங்க.. பிக் பாஸ் பிரியங்காவுக்கு என்ன ஆச்சு? பாதியில் போனதால் பைனல்ஸுக்கு வருவாரா? குழப்பத்தில் ரசிகர்கள்!
இதேபோன்று படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆளாளுக்கு யூகித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.