• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிய போகிறதா? நடிகை ஹேமா அளித்த விளக்கம்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிய போகிறதா? நடிகை ஹேமா அளித்த விளக்கம்..

நடிகை ஹேமா

நடிகை ஹேமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடியப்போகிறதா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு அந்த நாடகத்தில் ‘மீனா’ கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா ராஜ்குமார் கொடுத்துள்ள பதில் வைரலாகியுள்ளது

  • Share this:
    விஜய் டிவியில் ஹிட் சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது பல்வேறு திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வார எபிசோடுகளில் அண்ணி தனத்துக்கான வளைகாப்பு நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், கண்ணன் - ஐஸ்வர்யா காதல் விவகாரத்தால் களேபரமாகியுள்ளது. தனத்தின் அண்ணன் மகளான ஐஸ்வர்யாவுக்கு, பிரசாந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் பாண்டியன் ஸ்டோர்ஸின் கடைக்குட்டியான கண்ணனை காதலிக்கிறார்.

    இருவரும் தங்களது காதலை வீட்டில் தெரிவிக்க பயந்துகொண்டிருக்கும் சூழலில் ஐஸ்வர்யாவுக்கு பிரசாந்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண தேதியும் முடிவு செய்யப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடையும் ஐஸ்வர்யா, பிரசாந்திடம் நேரடியாக சென்று கண்ணனை காதலிப்பதை தெரிவிக்கிறார். தங்களது காதலுக்கு உதவுவதற்கு திருமணத்தை நிறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறார். ஆனால், இதனை உதாசினப்படுத்தும் பிரசாந்த், ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொள்வதை விரும்புகிறார். பிரசாந்தின் இந்த முடிவால், கண்ணனும், ஐஸ்வர்யாவும் என்னசெய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர்.



    Also Read : 'இது நடிப்பு இல்லை..ரியல்' - வெளியான சன் டிவி சீரியல் நடிகையின் திருமண வீடியோ..

    கண்ணன் - ஐஸ்வர்யா திருமணம் செய்து கொள்வார்களா? அல்லது ஐஸ்வர்யாவுக்கு பிரசாந்துடன் திருமணம் செய்து வைக்கப்படுமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு பதிலளிக்கும் விதமாக அண்மையில் புதிய புரோமோ ஒன்றை வெளியிட்ட விஜய் டிவி, அதில் புதிய டிவிஸ்டு ஒன்றையும் கூறியுள்ளது. அதாவது, கண்ணன் - ஐஸ்வர்யா, இருவீட்டுக்கும் தெரியாமல் கோவில் ஒன்றில் ரகசியமாக திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த தகவல் மூர்த்தி குடும்பத்துக்கு அத்தாச்சி வழியாக தெரியும்போது அதிர்ச்சியடைகின்றனர். மேலும், இரு வீட்டாரும் கண்ணன் - ஐஸ்வர்யாவை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். இப்படி, பரபரப்பாக கதைக்களம் நகர்த்தப்படுவதால், விரைவில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸூக்கு என்டு கார்டு போட திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் பரவியது.



    Also Read : பட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை சாய் பல்லவி வீட்டில் விஷேசமா ? - ஃபேமிலி போட்டோஸ்

    நெட்டிசன்கள் இதுகுறித்து தங்களுடைய சந்தேகங்களை இணையத்தில் எழுப்பி வந்த நிலையில், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் மீனா பதில் அளித்துள்ளார். அதில், சீரியல் முடியப்போகிறதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, நாடக் குழுவும் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ளார். இதனால், சீரியல் விரைவில் முடியப்போகிறது என்ற வதந்திக்கு மீனாவின் பதில் முற்றிப்புள்ளி வைத்துள்ளது. கண்ணன் - ஐஸ்வர்யா காதல் விவகாரம் இவ்வளவு நாட்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் திருமணம் செய்து கொண்டதால், அவர்களை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளப்போகிறார்களா? அல்லது அவர்களின் முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பது அடுத்த டிவிஸ்டாக பாண்டியன் ஸ்டோர்ஸில் இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: