Home /News /entertainment /

சர்கார் சர்ச்சை: அரசை அதிரடியாக கேள்வி கேட்கும் வரலட்சுமி

சர்கார் சர்ச்சை: அரசை அதிரடியாக கேள்வி கேட்கும் வரலட்சுமி

நடிகை வரலட்சுமி

நடிகை வரலட்சுமி

சர்கார் சர்ச்சை குறித்து நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான கருத்து ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

  • News18
  • Last Updated :
    சர்கார் சர்ச்சை குறித்து நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான கருத்து ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

    ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் இந்தப் படம் வெளியான 2 நாட்களில் அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்தது. அதேநேரத்தில் இந்தப் படத்தை சர்ச்சைகளும் விடாது துரத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களை படம் விமர்சிப்பதாகவும் , கோமளவல்லி என்ற ஜெயலலிதாவின் இயற்பெயர் படத்தில் பயன்படுத்தியிருப்பதற்கும் அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் படம் மீண்டும் மறுதணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி இலவச பொருட்களை தீயிட்டுக் கொளுத்தும் 5 நொடி காட்சி நீக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்திருந்தார்.



    இதுதவிர கோமளவல்லி என்ற பெயர் வரும் இடத்தில் கோமள என்ற சொல்லுக்கு மியூட் செய்யப்பட்டுள்ளது. மேலும் 56 வருடம் என்ற சொல் நீக்கப்பட்டு மறு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இன்று மாலை வெளியாகும் காட்சிகளிலிருந்து அமல்படுத்தப்படும்.

    சர்கார் சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், படத்தில் கோமளவல்லி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “"ஒரு படத்தைப் பார்த்து பயப்படும் அளவுக்கா இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது? நீங்களே உங்கள் நற்பெயரைக் கெடுத்துக் கொள்கிறீர்கள். எதை செய்யக்கூடாதோ அதையே செய்து கொண்டிருக்கிறீர்கள். தயவு செய்து இத்தகைய முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். படைப்பாற்றலின் சுதந்திரத்தை பறிக்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actress Varalakshmi, Sarkar

    அடுத்த செய்தி