ஆடி மாத சென்டிமெண்ட் - ட்ராபிக் ஜாமான திரையுலகம்

காட்சி படம்

நேற்றைய தினம் புதுப்பட பூஜை, பர்ஸ்ட் லுக், டீஸர் வெளியீடு என்று தமிழ் சினிமா அமர்க்களப்படுத்தியது. கொரோனா ஒரே நாளில் ஓடிப்போனதா? இல்லை ஒட்டு மொத்த திரையுலகுக்கு ஜாக்பாட் அடித்ததா? ஏன் நேற்று மட்டும் இந்த கொண்டாட்டம், இத்தனை அதிக நிகழ்வுகள்? எல்லாம் சென்டிமெண்ட் செய்த சித்து விளையாட்டு.

 • Share this:
  kaaகொரோனா பயம், ஊரடங்கு, திரையரங்குகள் எப்போது திறக்கும் என்ற சந்தேகம் என பல காரணங்களால் படத்தயாரிப்பு கணிசமாக குறைந்துள்ளது. முன்னணி நட்சத்திரங்களின் படங்களும், ஓடிடியில் வாங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ள திரைப்படங்களும் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 180 படங்கள் தயாரிக்கும் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களை காணவில்லை. இப்படியொரு சூழலில் நேற்று பர்ஸ்ட் லுக், டீஸர், படபூஜை, படப்பிடிப்பு என திரையுலகம் ட்ராபிக் ஜாமானது. காரணம், ஆடி மாத சென்டிமெண்ட்.

  வேறு எந்த தொழிலிலும் இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாவில் சென்டிமெண்ட் சின்ட்ரோம் தலைவிரித்தாடுகிறது. ஆடி மாதத்தில் எதுவும் புதிதாக தொடங்க மாட்டார்கள். அதுவொரு நம்பிக்கை. அதை யார் கடைபிடிக்கிறார்களோ இல்லையோ, தமிழ் சினிமா கடைபிடிக்கிறது. இன்று ஆடி மாதம் தொடங்குகிறது. ஆடி மாதத்தில் எந்த புது அறிவிப்பையும் வெளியிட மாட்டார்கள். மீறி வெளியிட்டால் படம் பிளாப்பாகும் என்ற அச்சம். அதனால், நேற்று மடையை திறந்துவிட்ட வெள்ளமாக அறிவிப்புகள் வெளியாயின.  சூர்யாவின் வாடிவாசல் படத்தின் டைட்டில் வெளியீடு, காஜல் அகர்வால் நடிக்கும் கருங்காப்பியம் பர்ஸ்ட் லுக் வெளியீடு, உறியடி விஜயகுமார் நடிக்கும் புதுப்படத்தின் பூஜை, கமலின் விக்ரம் படப்பிடிப்பு தொடக்க நாள், லைகா தயாரிப்பில் அதர்வா, ராஜ்கிரண் நடிக்கும் படத்தின் பூஜை, விக்ரம் பிரபுவின் டாணாக்காரன் டீஸர் வெளியீடு, நாசர் நடிக்கும் சில நேரங்களில் சில மனிதர்கள் பட அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு, கருணாஸின் ஆதார் படத்தின் பர்ஸ்ட் லுக் அறிவிப்பு, கார்த்தியின் சர்தார் படப்பிடிப்பு ஆரம்பம் என அமர்க்களப்படுத்தினர். இவை கொஞ்சம். இன்னும் சொல்லப்படாத பல நிகழ்வுகள் உள்ளன

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: