Home /News /entertainment /

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகும் பிரபலம்: காரணம் இதுதானா?

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகும் பிரபலம்: காரணம் இதுதானா?

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர்

ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ரச்சிதா சீரியலில் இருந்து விலகி விட்டால் மகாலட்சுமி கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்க போகிறார்கள். அது சீரியலின் விறுவிறுப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என கவலை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் ஒன்று தான் நாம் இருவர் நமக்கு இருவர். ஆரம்பத்தில் இந்த சீரியலின் கதைக்களமே வேறு. இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் செந்தில் பாலாஜி இருவேடங்களில் நடித்திருந்தார். அப்போது இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

பின்னர் சில மாதங்கள் கழித்து மீண்டும் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட போது, சீரியல் எப்போது மீண்டும் ஆரம்பமாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. பிறகு வேறு வழியில்லாமல் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் பாகம்- 2 படப்பிடிப்பு தொடங்கியது. சீரியலின் அனைத்து கதைக்களமும் மாற்றப்பட்டது. இருப்பினும், இந்த சீரியல் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. அதற்கு காரணம் சரவணன் மீனாட்சி ஹிட் சீரியலின் சீசன் வெற்றிக்கு பிறகு நடிகை ரச்சிதா மீண்டும் இணைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல நடிகர் செந்தில் பாலாஜிக்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். மேலும், கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பின் உச்சத்தில் சீரியலின் கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. முத்துராசை கொன்றது யார் என்ற ஒற்றை கேள்வியை வைத்து 2 வாரங்களாக கதை சென்றுகொண்டிருக்கிறது. மேலும், முத்துராசுவை கொன்றது யார்? என்ற டெம்ப்லேட்டுடன் பல மீம்களும் இணயத்தில் வலம் வந்தன. எனவே கூடிய விரைவில் முத்துராசுவை யார் கொலை செய்திருப்பார்கள் என்ற உண்மை விரைவில் தெரியவரும் என்று சீரியல் பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அது என்னவென்றால் சீரியலில் கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரச்சிதா சீரியலில் இருந்து விலகுகிறாராம். இவருக்கு கன்னட சினிமாவில் படவாய்ப்புகள் வந்துள்ளதால் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. கன்னடத்தில் பெரிய நடிகரின் படத்தில் நடிக்க இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பது இன்னும் தெரியவில்லை.

ஒரு கொலையை வைத்து கிட்டத்தட்ட ஒரு மாதம் எபிசோட்களை நகர்த்தி வந்தாலும், விறுவிறுப்பான காட்சிகளோடு ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் சஸ்பென்ஸ்களை அதிகரித்து வருகிறார் சீரியல் இயக்குனர். அதுவும் இந்த வாரம் புது என்ட்ரி ஆக மாறன் என்ற கதாபாத்திரம் சீரியலில் நுழைவதை பார்த்து என்னவாக இருக்கும் இனி கதை எப்படிப் போகும் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும்போது இந்த செய்தி அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

Also read... நெட்டிசன்களின் செயலால் ஏற்பட்ட மனஅழுத்தம் - தனது அனுபவம் பற்றி ஷேர் செய்த நேஹா மேனன்!

ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ரச்சிதா சீரியலில் இருந்து விலகி விட்டால் மகாலட்சுமி காதாபாத்திரத்தில் இனி யார் நடிக்க போகிறார்கள். அது சீரியலின் விறுவிறுப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என கவலை தெரிவித்து வருகின்றனர். நடிகை ரச்சிதா சரவணன் மீனாட்சி 2.0, 3.0, 4.0 என 3 சீன்சகளில் நடித்துள்ளார். கதாநாயகர்கள் மாறினாலும் மூன்று சீசன்களிலும் இவரே ஹீரோனியாக நடித்து சீரியலை ஹிட்டாகியுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி