• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இவர் தான் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகரா? யார் இந்த ஹென்ரி கேவில்?

இவர் தான் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகரா? யார் இந்த ஹென்ரி கேவில்?

James Bond

James Bond

அடுத்த படத்துக்கு புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகரை தேடும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அந்த நடிகர் இருக்க வேண்டும்.

  • Share this:
சீட் நுனிக்கு இழுத்துவரக் கூடிய அளவுக்கு சாகசங்களை செய்து பல ஆண்டுகளாக உலக சினிமா ரசிகர்களை பரவசப்படுத்தி கட்டிப்போட்டிருக்கும் ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டர் தான் ஜேம்ஸ் பாண்ட். 007 என்ற சீக்ரெட் கோட் பெயரில் அண்டர் கவர் ஏஜெண்டாக செயலாற்றும் ஒரு சூப்பர் டூப்பர் உளவு அதிகாரி தான் இந்த கேரக்டர்.

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இதுவரை 25 படங்கள் வெளிவந்துள்ளன. சீன் கோனரி, டேவிட் நிவியன், ஜார்ஜ் லாசன்பை, ரோகர் மூர், திமோத்தி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் என பல ஜேம்ஸ் பாண்ட் ஹீரோக்கள் அந்த கதாபாத்திரத்துக்கு உறுதி சேர்த்திருந்த நிலையில், நிகழ்கால ஜேம்ஸ் பாண்டாக நம்மையெல்லாம பரவசப்படுத்திய நடிகர் டேனியல் கிரெய்க் திடீரென ஜேம்ஸ் பாண்ட் கேரக்டருக்கு முழுக்கு போடுவதாக அறிவித்து விலகினார். டேனியல் கிரெய்கின் நடிப்பில் கடந்த மாதம் ‘நோ டைம் டூ டை’ என்ற ஜேம்ஸ் பாண்ட் ரிலீஸ் ஆனது.

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்?

இனி அடுத்த படத்துக்கு புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகரை தேடும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அந்த நடிகர் இருக்க வேண்டும். அப்படி ஒரு நடிகர் யாராக இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Also read: ரஷ்யாவில் இன்று முதல் சம்பளத்துடன் அனைவருக்கும் விடுமுறை – ஏன் தெரியுமா?

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஆக இத்ரிஸ் எல்பா, டேனியல் கலுயா, ரிச்சர்ட் மேடன், டாம் ஹார்டி, மைக்கேல் ஃபாஸ்பெண்டர் போன்ற நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. இந்த லிஸ்ட்டில் சமீபத்தில் இணைந்திருப்பவர் தான் நடிகர் ஹென்ரி கேவில்.

யார் இந்த ஹென்ரி கேவில்?

ஸ்டார் டஸ்ட், இம்மார்டல்ஸ், மேன் ஆஃப் ஸ்டீல், சேண்ட் கேசில், மிஷன் இம்பாசிபிள் - ஃபால்அவுட், பிளட் கிரீக் போன்ற படங்களில் நடித்துள்ள இந்த பிரிட்டிஷ் நடிகர் சூப்பர் மேன் ஆகவும் ஷெர்லாக் ஹோம்ஸ் ஆகவும் நடித்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். எனவே இந்த அனுபவமே அவருக்கு ஜேம்ஸ் பாண்ட் பட வாய்ப்பை வழங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: பாகிஸ்தான் மேஜர் ஜெனரலின் மகனுக்கு தேசதுரோக வழக்கில் 5 ஆண்டு சிறை!

டேனியல் கிரெய்க் கேசினோ ராயல் படத்தில் முதல் முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் ஏற்ற போதே, ஹென்ரி அவருடன் போட்டியிட்டார் இருப்பினும் டேனியலிடம் அவர் அப்போது வாய்ப்பை இழந்தார். அவருக்கு தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தன்னால் இந்த கேரக்டரை ஏற்று நடிக்க முடியும் என தனது விருப்பத்தையும் ஹென்ரி வெளிப்படுத்தியிருந்தார்.

இதனிடையே ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையின் தயாரிப்பாளரான பார்பரா ப்ரொகொலி ஜேம்ஸ் பாண்ட் படத்துக்கான நடிகர் தேர்வு 2022ல் தான் தொடங்கவே செய்யும் எனவும் பெண் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கு வாய்ப்பு இல்லை எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

Also read: பிரசாந்த் கிஷோருக்கு பதிலடி.. காங்கிரஸ் கட்சிக்காக வக்காலத்து வாங்கும் சிவசேனா தலைவர்!

ஆனால் ஹென்ரி கேவிலை அடுத்த ஜேம்ஸ் பாண்டாக முன்மொழிந்து ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ட்விட்டரில் ஹேஷ்டேக் புரட்சியை தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தது நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: