Home /News /entertainment /

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்?

இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன்

  • News18
  • Last Updated :
    பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சேரன் வெளியேறுகிறார் என்று தகவல்கள் வந்துள்ளன.

    கடந்த ஜூன் மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த 6 பேரில் யார் இறுதி கட்ட டைட்டிலை ஜெயிக்கப் போகிறார்கள் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் அனைத்துப் போட்டிகள், விதிகளை சரியாகப் பின்பற்றும் நபரை நிகழ்ச்சிக் குழுவே தேர்வு செய்து இறுதிச் சுற்றுக்கு அனுப்பி வைக்கும். அதை கோல்டன் டிக்கெட் என்பார்கள். அந்த கோல்டன் டிக்கெட் யாருக்கு கொடுக்கப் போகிறார்கள் என்பதை கமல் இன்று அறிவிக்க இருப்பது போன்ற புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

    இதற்கிடையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றத்துக்கு நாமினேட் செய்யப்பட்டதில், இயக்குநர் சேரன் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறுகிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கெனவே, ஒருமுறை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அவர் ரகசிய அறையில் சில நாள்கள் இருந்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Director cheran

    அடுத்த செய்தி