சூட்டிங் ஸ்பாட்டில் விபத்தில் சிக்கியதாக செய்திகள் பரவிய நிலையில், தான் நலமாக இருப்பதாக நடிகை அனுஷ்கா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து வருகிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி. நயன்தாரா, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் நடிகர் ராம்சரண் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் அனுஷ்காவுக்கு அடிபட்டதாக செய்திகள் பரவின. இந்நிலையில் தான் நலமாக இருப்பதாக நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், ‘நான் நலமாக இருக்கிறேன். சந்தோஷமாக சீட்டலில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். லவ் யூ ஆல்’ என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது மாதவன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘சைலன்ஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா ஷெட்டி
Also watch
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.