ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

I'm waiting .... விக்ரம் 58 குறித்து அப்டேட் தந்த இர்ஃபான் பதான்

I'm waiting .... விக்ரம் 58 குறித்து அப்டேட் தந்த இர்ஃபான் பதான்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

கடாரம் கொண்டான் படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் 58-வது படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாப்பாத்திரத்ததில் நடிப்பதை படக்குழு சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக இஃர்பான் பதான் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வணக்கம் மக்களே.. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி.. முதல் schedule நல்லபடியா முடிஞ்சாச்சு.. மீண்டும் எல்லாரையும் சந்திக்க I'm waiting’ என்று பதிவிட்டுள்ளார்.

Also watch

First published:

Tags: Irfan Pathan