Home /News /entertainment /

மகளிர் தினத்தை ஒட்டி பேரணியை தொடங்கிவைத்த நயன்தாரா...!

மகளிர் தினத்தை ஒட்டி பேரணியை தொடங்கிவைத்த நயன்தாரா...!

International Women's Day

International Women's Day

International Women's Day

  • News18
  • Last Updated :
மகளிர் தினத்தை ஒட்டி சென்னையில் பெண்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணியை நடிகை நயன்தாரா தொடங்கி வைத்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வருமான வரித்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு  பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.

பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவியர், பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.



பேரணியில் கலந்துகொண்ட மாணவிகள் பிங் நிற உடை அணிந்து பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தி சென்றனர். சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்கிய பேரணி எத்திராஜ் சாலை வழியாக கல்லூரி சாலை வழியாக 5கி.மீ சென்று நுங்கம்பாக்கம் பகுதியில் நிறைவடைந்தது.




Also Read: காஞ்சிபுரம் நபருக்கு கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்தப்பட்ட 27 பேர்...!


Also Read: கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம்




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



Published by:Sankar
First published:

Tags: Actress Nayantara, Women's Day

அடுத்த செய்தி