ராதிகா ஆப்தே முதல் அனுராக் காஷ்யப் வரை... இந்தியாவின் ’எம்மி விருதுகள்’ சாதனை!

இக்குழுவினருக்கு இந்திய நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ராதிகா ஆப்தே முதல் அனுராக் காஷ்யப் வரை... இந்தியாவின் ’எம்மி விருதுகள்’ சாதனை!
படம்- (instagram radhikaofficial)
  • News18 Tamil
  • Last Updated: November 26, 2019, 12:24 PM IST
  • Share this:
சர்வதேச அளவில் சின்னத்திரைக்கான விருது விழாவாகக் கருதப்படுவது எம்மி விருதுகள். ஆஸ்கருக்கு இணையான எம்மி விருதுகள் 2019-க்கு நடிகை ராதிகா ஆப்தே சிறந்த நடிகைக்கான விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

சிறந்த டிவி திரைப்படம் (நெட்ஃப்ளிக்ஸ்) என்ற பிரிவில் கரோன் ஜோஹர் இயக்கிய ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’, சிறந்த நாடகம் பிரிவில் ‘சேக்ரட் கேம்ஸ்’ (நெட்ஃப்ளிக்ஸ்), சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற பிரிவில் ‘தி ரீமிக்ஸ்’, சிறந்த ஆவணப்படம் பிரிவில் ‘விட்னெஸ்’ ஆகியன பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இவ்விருதுகளுக்கான விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து இயக்குநர் அனுராக் காஷ்யப், ராதிகா ஆப்தே, நவாசுதின் சித்திக், குப்ரா செய்ட், கரன் ஜோஹர், ஜோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, விக்கிரமாதித்யா, ரோனி ஸ்க்ரீவாலா ஆகியோர் சென்றனர்.

 
View this post on Instagram
 

All of us, lust stories and sacred games! @iemmys @netflix_in photographed by @jasonkimphoto


A post shared by Radhika (@radhikaofficial) on


இந்திய கலைஞர்களுக்கோ படைப்புகளுக்கோ விருதுகள் கிடைக்கவில்லை என்றாலும் சர்வதேச எம்மி விருதுகளுக்கு இத்தனை பேர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதே பெரும் விருதுகாகக் கருதப்படுகிறது. இக்குழுவினருக்கு இந்திய நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: 120 ஆண்டுகளுக்குப் பின் டைம்-ட்ராவல் செய்து மீண்டும் வந்துள்ள க்ரெட்டா தன்பெர்க்..?
First published: November 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading