சின்மயியை நீக்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை!

பாடகி சின்மயி

சங்க விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார்

  • News18
  • Last Updated :
  • Share this:
    பாடகி சின்மயியை தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு.

    திரைத்துறையில் உள்ள பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் பாடகி சின்மயி குரல் எழுப்பினார். இந்நிலையில் சங்க விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி கடந்த ஆண்டும் நவம்பர் 18-ம் தேதி சின்மயி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சின்மயி தரப்பில் சென்னை 2-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.முருகேசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2006-ம் ஆண்டிலேயே நுழைவு கட்டணம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணங்களை செலுத்தி விட்டதாகவும், 2018- ம் ஆண்டு உறுப்பினர் பட்டியலில் தன் பெயர் இருப்பதாகவும் கூறி சின்மயி தரப்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் தன் விளக்கத்தைக் கேட்காமல் சங்கத்தில் இருந்து நீக்கியதாகவும் சின்மயி தரப்பில் வாதிடப்பட்டது.

    இதையடுத்து சின்மயியை சங்கத்தில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக மார்ச் 25-ம் தேதிக்குள் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார் நீதிபதி.

    Also watch

    Published by:Prabhu Venkat
    First published: