நடராஜன் போஸ்டர் உடன் ஆஸ்திரேலியா மைதானத்தை அதிர வைத்த அஜித் ரசிகர்கள்

நடராஜன் போஸ்டர் உடன் ஆஸ்திரேலியா மைதானத்தை அதிர வைத்த அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தது உலகம் முழுக்க வைரலாகியுள்ளது.

  • Share this:
ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். கிரிக்கெட் போட்டியை நேரில் காண வந்த அஜித் ரசிகர்கள் சிலர் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து அச்சடிக்கப்பட்ட போஸ்டரை கையில் வைத்திருந்தனர். அதை படம்பிடித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் ஒளிபரப்பியதால் உலகம் முழுக்க அந்த போஸ்டர் வைரலானது. அந்த போஸ்டரில் இந்திய அணியில் இடம் பெற்று விக்கெட்டுகளைக் குவித்து சாதனை செய்துவரும் தமிழக வீரர் நடராஜனுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றதிலிருந்தே கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது பலதரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தனது திறமையால் தமிழகத்துக்கு உலக அளவில் பெருமை தேடித்தந்த நபராக நடராஜன் மாறியிருக்கிறார். இத்தொடரின் தொடர் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற ஹர்திக் பாண்டியா, அதை நடராஜன் கையில் கொடுத்து நெகிழ்ந்திருப்பதையும் கிரிக்கெட் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.மூன்றாவது டி20 தொடரில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களைக் குவித்த ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கான டி20 தொடரை 2-1 என இந்திய அணி வென்றுள்ளது. 20 ஓவர் தொடரைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர், வரும் 17-ம் தேதி தொடங்குகிறது.
Published by:Sheik Hanifah
First published: