பிரபல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் வீட்டில் திடீர் ரெய்டு!

பிரபல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் வீட்டில் திடீர் ரெய்டு!

மாதிரிப் படம்

பெங்களூருவில் உள்ள நடிகர் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், சுதீப், யாஷ் உள்ளிட்ட நடிகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கர்நாடக மாநிலத்தில் கன்னட திரையுலத்தை சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

  கன்னட திரையுலகினருக்கு அதிர்ச்சி தரும் விதமாக வருமான வரித்துறை இன்று அதிகாலை சோதனை தொடங்கியது. பெங்களூருவில் உள்ள நடிகர் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், சுதீப், யாஷ் உள்ளிட்ட நடிகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

  பிரபல கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இவர் ரஜினியை வைத்து ‘லிங்கா' படத்தை தயாரித்தவர். இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை 6 மணி முதல்  சோதனை நடைபெற்றது.

  மேலும் மனோகர், விஜய் கிரன்காதுரு, ஜெயண்ணா ஆகிய தயாரிப்பாளர்களின் இருப்பிடங்களிலும் சோதனை நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை முதலே இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஒரே நேரத்தில் கன்னட திரையுலகத்தின் முக்கிய பிரபலங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட திரைத்துறையில் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

  சட்டப்பேரவையில் துரைமுருகன் கண்ணீர் - வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published: