தமிழில் ஆடுகளம், காஞ்சனா-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான டாப்சிக்கு சொந்தமான மும்பை வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர். இதேபோன்று இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், விகாஷ் ஆகியோர் இணைந்து நடத்திய படத்தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான பேந்தம் பிலிம்ஸ் உட்பட 30 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் படத்தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இயக்குநர், பங்குதாரர்களுக்கு பரிமாற்றப்பட்ட தொகையில் 350 கோடி ரூபாயை கணக்கில் காட்டாமல் மறைத்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், 300 கோடி ரூபாய் முரண்பட்ட தொகை குறித்து படத்தயாரிப்பு நிறுவன ஊழியர்களால் விளக்கமளிக்க முடியவில்லை. அத்துடன், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் உண்மையான தொகையை மறைத்து கணக்கு காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. 5 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், காஷ்யப், டாப்சிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை தொடர்வதாகவும் வருமானவரித்துறை கூறியுள்ளது.
மேலும் படிக்க... நியூஸ்18 எதிரொலி.. அத்திவரதர் வைபவ டிக்கெட் முறைகேடு.. களத்தில் இறங்கிய இந்து அறநிலையத்துறை..
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காகவே டாப்சி, காஷ்யப் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதுதொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புபவர்களிடம் மோடி அரசு ரெய்டு விடுவதாக விமர்சித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Taapsee Pannu