வருமான வரி விவகாரம்: நேரில் ஆஜராக விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

விஷால்
- News18
- Last Updated: July 24, 2019, 7:49 PM IST
வருமான வரி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷாலை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், நடிகராகவும் வலம் வரும் விஷால், தனது பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் பாண்டிய நாடு, சண்டக்கோழி 2, துப்பறிவாளன், இரும்புத்திரை உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
இந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்ட பணத்துக்கு நிறுவனம் சார்பில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு பிடித்தம் செய்த தொகைக்கு நிறுவனத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வருமான வரித்துறையினர் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் பதிலளிக்காத காரணத்தினால், விஷால் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஆகஸ்ட் 2-ம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது.
வீடியோ பார்க்க: மக்கள் நாயகன் சூர்யா
தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், நடிகராகவும் வலம் வரும் விஷால், தனது பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் பாண்டிய நாடு, சண்டக்கோழி 2, துப்பறிவாளன், இரும்புத்திரை உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
இந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்ட பணத்துக்கு நிறுவனம் சார்பில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு பிடித்தம் செய்த தொகைக்கு நிறுவனத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஆகஸ்ட் 2-ம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது.
வீடியோ பார்க்க: மக்கள் நாயகன் சூர்யா