அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் குமார்

விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் குமார் நடிக்க உள்ள படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க உள்ளார்.

Web Desk | news18
Updated: November 8, 2018, 8:49 PM IST
அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் குமார்
அஜித்| பிங்க் பட போஸ்டர்
Web Desk | news18
Updated: November 8, 2018, 8:49 PM IST
விஸ்வாசம் படத்தை முடித்துவிட்டு எச்.வினோத் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கும், அஜித் குமாரின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் அஜித் குமார் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ஒரு பாடல் மட்டுமே எஞ்சியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

படத்தின் இரண்டாம் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடைவே வரவேற்ப்பை வெற்றது. அந்த போஸ்டரில் பொங்கலுக்கு படம் வெளியிடப்படும் என்பது தெரிவிக்கப்பட்டிருந்தது. விஸ்வாசம் படத்தை முடித்துவிட்டு தீரன், சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய எச்.வினோத் குமாரின் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். பாலிவுட்டில் பெரிய ஹிட் ஆன ‘பிங்க்’ படத்தின் தழுவலாக இந்த படம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

படத்தின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு தன்னுடைய ஸ்டைலில் வினோத் குமார் திரைக்கதை அமைத்து வருவதாக கூறப்படுகிறது. பிங்க் திரைப்படத்தில் வக்கீலாக நடித்த அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய விருது வென்ற பிங்க் திரைப்படம், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து அழுத்தமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமா செய்திகள்...

வசூலில் ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்த `சர்கார்’!

Also See..
First published: November 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்