ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ராட்சசன் & 96 திரைப்படங்களுக்கு சர்வதேச நிறுவனம் அளித்த அங்கீகாரம்

ராட்சசன் & 96 திரைப்படங்களுக்கு சர்வதேச நிறுவனம் அளித்த அங்கீகாரம்

ராட்சசன் மற்றும் 96 பட போஸ்டர்கள்

ராட்சசன் மற்றும் 96 பட போஸ்டர்கள்

பாலிவுட் திரைப்படங்களை விட பிராந்திய மொழிப்படங்கள் அதிகளவில் டாப் வரிசையில் இடம்பெற்றுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

2018-ம் ஆண்டின் சிறந்த இந்தியப் படங்கள் பட்டியலில் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய ராட்சசன் மற்றும் 96 ஆகிய இரண்டு திரைப்படங்களும் இடம் பிடித்து அசத்தியுள்ளன.

சர்வதேச திரைப்பட இணையதளமான ஐ.எம்.டி.பி (IMDb) 2018-ம் ஆண்டின் சிறந்த படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியப் படங்கள் வரிசையில் ஆச்சரியம் ஏற்படுத்தும் விதமாக 2 தமிழ்ப்படங்கள் இடம்பெற்றுள்ளன. பாலிவுட் திரைப்படங்களை விட பிராந்திய மொழிப்படங்கள் அதிகளவில் டாப் வரிசையில் இடம்பெற்றுள்ளது.

அந்தாதுன் படத்தின் போஸ்டர்

பார்வையற்ற பியானோ கலைஞரை மையப்படுத்தி வெளியாகி ஹிட் அடித்த மராத்தி திரில்லர் படமான ‘அந்தாதுன்’ பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. படம் பார்த்தவர்களை சீட்டின் நுனிக்கு கொண்டுவந்து தமிழில் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக ஹிட் அடித்த ராட்சசன் படம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

மேலும், அனைத்து தரப்பினரையும் கவர்ந்து ரசிகர்கள் கொண்டாடிய 96 திரைப்படமும் இரண்டாம் இடத்தில் உள்ளது. தெலுங்கு சினிமாவில் இருந்து ரங்கஸ்தாலம், மகாநதி ஆகிய படங்களும் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சிறந்த படங்கள் பட்டியலில் தமிழ் சினிமாவில் இருந்து 2 படங்கள் இடம் பெற்றுள்ளது சினிமா உலகினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Also See..

Published by:Sankar
First published:

Tags: 96 Film, Ratsasan