பிரசாத் ஸ்டியோவுக்குள் இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க முடியாது - பிரசாத் ஸ்டியோ

பிரசாத் ஸ்டியோவுக்குள் இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க முடியாது - பிரசாத் ஸ்டியோ

இளையராஜா

சுமார் 40 ஆண்டுகளாக இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்த பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டார்

  • Share this:
    பிரசாத் ஸ்டியோவுக்குள் இளையராஜாவை அனுமதித்தால் கூட்டம் கூடி விடும் என்பதால் அவரை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பிரசாத் ஸ்டியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் இளையராஜா, வழக்கறிஞர் ஆணையர் மற்றும் இரு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் அனுமதிக்கலாம் என நீதிபதி அறிவுறுத்தி உள்ளனர். பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள் தங்கள் கருத்தை நாளை தெரிவிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சுமார் 40 ஆண்டுகளாக இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்த பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டார். இதை தொடர்ந்து தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொள்ளவும் தியானம் செய்யவும் அனுமதிக்கக்கோரி இளையராஜா சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published: