• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நிதி திரட்டும் விழா? இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடைகோரிய வழக்கு ஒத்திவைப்பு!

நிதி திரட்டும் விழா? இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடைகோரிய வழக்கு ஒத்திவைப்பு!

 இந்த விருதில் ரூ. 1,00,000, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை கேரளா அரசு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

 இந்த விருதில் ரூ. 1,00,000, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை கேரளா அரசு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை

  • News18
  • Last Updated :
  • Share this:
‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

இளையராஜாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிக்கு தடை கேட்டு தயாரிப்பாளர்கள் சதீஷ் குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது.

“இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. புக் மை ஷோ மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. அதுதொடர்பான ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். ரூ.7 கோடி நிதி திரட்டுவதாக கூறியுள்ளனர். இது நஷ்டத்தில் தான் முடியும். பாராட்டு விழா எனக் கூறிவிட்டு, நிதி திரட்டும் நிகழ்ச்சியாக நடத்துகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடு தொடர்பாக மேற்கொண்ட ஒப்பந்தத்தில் எவ்வளவு தொகை எனக் கூறப்படவில்லை. அதனால் அனைத்தையும் மேற்பார்வையிட நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்” என்று மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது

இதற்கு நீதிமன்றத்தில் பதில் கொடுத்த விஷால் தரப்பினர், “தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்டி கொடுக்க நிதி திரட்டுவதற்காக இளையராஜா நிகழ்ச்சி நடத்த 2016-ம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்டது. 2017-18 ஆண்டின் கணக்கு வழக்குகள் நடக்க இருக்கும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்து தான் இளையராஜா 75 நிகழ்ச்சி குறித்து முடிவெடுக்கப்பட்டது. ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு ரூ. 35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இளையராஜாவுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறி ‘இளையராஜா 75’ நிகழ்ச்சி தொடர்பான ஒப்பந்தங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்காமலும், தேதி குறிப்பிடாமலும் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

காதல் தோல்வி... தீக்குளிக்க முயற்சி... ரூ.1 லட்சம் கொடுத்தால் கூல் ஆயிடுவாப்ல - வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: