இளையராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞர் மரணம்

இளையராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞர் மரணம்

இளையராஜா | சசிதரன்

இளையராஜாவின் ஆஸ்தான் இசைக்கலைஞர் சசிதரன் மரணமடைந்தார்.

  • Share this:
இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களுக்கு பாஸ் (bass) கிடார் வாசித்திருக்கும் சசிதரன் நேற்று காலமாகியுள்ளார். இவர் இளையராஜா மனைவியின் சகோதரர் ஆவார். சசிதரன் மறைவுக்கு திரை இசைக்கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இறுதிச்சடங்குகள் இன்று மாலை சென்னை பெசன்ட் நகரில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் இளையராஜாவுடன் சுமார் 50 ஆண்டுகாலம் வெற்றிகரமாக பயணித்த புருஷோத்தமன் தனது 75-வது வயதில் மரணமடைந்தார். இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் கிட்டார் கலைஞராக இளையராஜாவும் டிரம்ஸ் கலைஞராக புருஷோத்தமனும் பணியாற்றிய காலம் முதலே இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.இசை கலைஞர்கள் வாசிக்க வேண்டியதை இசை குறிப்புகளாக கொடுப்பது இளையராஜாவின் ஸ்டைல். அப்படி இளையராஜா கொடுக்கும் குறிப்புகளை துல்லியமாக வாசிக்கும் திறமை கொண்ட புருஷோத்தமன், நாளடைவில் இளையராஜாவின் இசை கண்டக்ட்டராகவும் உருவெடுத்தார். மேலும் மடை திறந்து பாடலில் டிரம்ஸ் கலைஞராகவே இவர் தோன்றியிருப்பார்.

அதேபோல் இளையராஜாவின் நெருங்கிய நண்பரும், பிரபல பாடகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மரணமடைந்தார். இப்படி அடுத்தடுத்த மரணங்களால் இளையராஜா மனதளவில் உடைந்து போனதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது சசிதரனின் மரணமும் இளையராஜா உள்ளிட்ட குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: