தனது திரைத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக இசையமைப்பாளர் இளையராஜா தனது வீட்டிலேயே பின்னணி இசையமைத்துள்ளார் இளையராஜா.
அன்னக்கிளி படம் தொடங்கி ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஆரம்பத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் இசையமைத்து வந்தார். பின்னர் பிரசாத் ஸ்டுடியோவில் தனக்கான ஒலிப்பதிவுக் கூடம் அமைத்து அங்கு பல ஆண்டுகளாக இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோஸ் நிர்வாகத்துக்கும் இளையராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரது ஒலிப்பதிவுக் கூடத்தை மாற்றிக் கொள்ளச் சொல்லிவிட்டது. இந்தப் பிரச்னையில் பாரதிராஜா உள்ளிட்டோர் இளையராஜாவுக்கு ஆதரவாக நின்றனர். இதுதொடர்பான வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழரசன் படத்துக்கான இசைக்கோர்ப்பு பணிகளை முதன் முதலாக தனது வீட்டிலேயே மேற்கொண்டு வருகிறார் இளையராஜா. ஒட்டுமொத்த வாத்தியக் கலைஞர்களையும் வீட்டுக்கு வரவழைத்து பின்னணி இசையை லைவ்வாக செய்து வருகிறார். இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் ஒரு படத்துக்கான பின்னணி இசையை வீட்டில் வைத்து இசையமைப்பது இதுவே முதல்முறை.
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், இயக்குநர் மோகன் ராஜா மகன் ப்ரணவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் ஆகியோர் பாடல் பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.