புதிய ஸ்டூடியோவில் வெற்றிமாறன் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா

இளையராஜா

புதிய ஸ்டூடியோவில் இயக்குநர் வெற்றிமாறன் படத்துக்கான இசையமைப்பு பணிகளை தொடங்கினார் இளையராஜா.

  • Share this:
40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா இசையமைத்து வந்தார். ஆனால் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்க இருப்பதாக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் இளையராஜாவை காலி செய்யச் சொன்னது. இதனை எதிர்த்து இளையராஜா நீதிமன்றம் வரை சென்றார். ஆனால் இறுதிவரை இளையராஜாவை ஸ்டூடியோவிற்குள் அனுமதிக்காமல் அவரை காலி செய்ய வைத்தது பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம்.

இந்நிலையில் கோடம்பாக்கத்தில் புதிதாக ஒரு இடத்தை வாங்கி ஸ்டூடியோ கட்டும் பணிகளை இளையராஜா தொடங்கினார். இந்நிலையில் இன்று ஸ்டூடியோ திறக்கப்பட்டு பணிகளை தொடங்கினார் இளையராஜா. இன்னும் ஸ்டூடியோவின் முழு வேலையும் முடிவடையவில்லை என்று தெரிவித்த இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வந்ததற்கு வருத்தம் இல்லை. எல்லாம் சவால்தான் எவ்வளவோ இடைஞ்சல்கள் வரும். என்றார்.

மேலும் விஜய் சேதுபதி வெற்றிமாறன் ஆகியோர் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவுக்கு இன்று வருகை தந்தனர். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்துக்கு இசையமைக்கும் பணிகளை இளையராஜா தனது புதிய ஸ்டூடியோவில் இன்று தொடங்கினார்.

மேலும் படிக்க: 10,000 கி.மீ.க்கும் அதிகமாக பைக்கில் பறந்த அஜித் - நண்பர் வெளியிட்ட சீக்ரெட்

செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிமாறன், “சூரியைச் சுற்றியே கதை நகர்வதால் அவர் கதையின் நாயகனாவார். ஆனால் கதாநாயகன் விஜய் சேதுபதி தான். முதற்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். அதேவேளையில் படத்தின் இசையமைக்கும் பணிகளும் தொடங்கியிருப்பதாக தெரிவித்தார்.
Published by:Sheik Hanifah
First published: