முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வீடு தேடி வருகிறேன்... பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இளையராஜா

வீடு தேடி வருகிறேன்... பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா

இசைக்காக புதிய ஓடிடி தளம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதன் மூலம் ரசிகர்களின் இல்லங்களுக்கு வர இருப்பதாகவும் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இளையராஜா, தனது பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல துடிதுடித்துக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களே உங்களையும் என்னையும் சந்திக்க விடாமல் இந்தக் கொரோனா காலகட்டம் தடுக்கிறது. இருந்தாலும் உங்கள் அன்பு உள்ளங்களை நான் நன்றாக அறிவேன். உங்களுடனேயே இசை வடிவில் நான் தினமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். எனக்கும் நன்றாக தெரியும்.

எந்த நிமிடமானாலும் சரி, எந்த ஒரு நிகழ்வானாலும் சரி, என்னுடைய இசை உங்களுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதும் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். வெறும் இசை மட்டும் வந்தால் போதுமா? நான் வர வேண்டாமா உங்கள் இல்லத்துக்கு.

இசை ஓடிடி மூலமாக உங்கள் இல்லம் தேடி நானே வருகிறேன். இந்த இசை ஓடிடி புதிதாக தொடங்க இருக்கும் செய்தியை உங்களுக்கு இந்த பிறந்தநாளில் சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த இசை ஓடிடியில் ஒவ்வொரு பாடலும் எப்படி உருவானது என்ற அரிய பெரிய விஷயங்களும், அப்போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பது பற்றியும், அந்த பாடலுக்கான உழைப்பு பற்றியும், வேறு எந்த சேனலிலும் இடம்பெறாத தகவல்களை தாங்கி வரும்.

மேலும் உலக மாபெரும் இசைக்கலைஞர்கள் தங்கள் அனுபவங்களின் மூலமாக அவர்கள் உணர்ந்ததையும், என்னைப் பற்றிய அபிப்ராயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் இதில் பங்கு பெற்று அவர்களின் அனுபவங்களின் மூலமாக சுவாரஸ்யமான தகவலை வழங்க இருக்கிறார்கள். இதெல்லாம் இசை ஓடிடி வழியாக உங்கள் வீடு தேடி வருகிறது. அந்த நாளுக்கு காத்திருங்கள். காத்திருந்தாலும் அது வீண்போகாது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய அனுபவங்களியும், உணர்வுகளையும் நான் உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள உங்கள் வீடு தேடி வந்து கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா தனது 77-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இளையராஜாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் நேரலையில் பாடல்கள் ஒலித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: எழுத்தாலும் பேச்சாலும் தமிழைச் செதுக்கிய கலைஞர்… இசையாலும் குரலாலும் தமிழை உயர்த்திய இளையராஜா 

' isDesktop="true" id="299551" youtubeid="FREnHn7f0_E" category="entertainment">

First published:

Tags: Ilaiyaraja