• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எனது பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது: இளையராஜா

எனது பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது: இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா

எனது பாடல்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது என்று இசையமைப்பாளர் இளையராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். 

  • News18
  • Last Updated :
  • Share this:
எனது பாடல்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது என்று இசையமைப்பாளர் இளையராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். 

காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம் மீது காவல்துறையில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் மீது காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது ஒரு சிவில் பிரச்னை. எங்கள் மீது குற்றவியல் புகார் அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை. அதை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது ஒரு சிவில் பிரச்னை இதன் அடிப்படையில் குற்றவியல் புகார் அளிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக விளக்கமளித்திருக்கும் இளையராஜா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்ப்ட்டிருப்பதாவது, “நான் 2014-ம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களை பயன்படுத்த தடைகோரிய வழக்கின்படி இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும். அந்த தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும். நான் 2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளித்தேன். சட்டத்துக்கு புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சிடிக்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர். அந்த குற்றவியல் நடவடிக்கை வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று வெளிவந்தது. அதில் நீதியரசர் எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். அதில் எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை. இந்த வழக்குக்கும் எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஒரு சில செய்தி நிறுவனங்கள் ‘இளையராஜா பாடல்கள் வழக்கு ரத்து’ என்றும் சில இளையராஜா காப்புரிமை வழக்கு தள்ளுபடி’ என்றும் முன்னுக்கு பின் முரணாக செய்திகளை வெளியிடுகின்றனர். நான்கு ஆண்டுகள் வழக்கு நடத்தி இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இதுபோன்ற உணமைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு தவறான செய்தி வெளியிடுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் நஷடஈடு கோரி வழக்கு தொடரப்படும்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: