• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆங்கிலப் பாடல் கம்போஸ் செய்த இளையராஜா!

ஆங்கிலப் பாடல் கம்போஸ் செய்த இளையராஜா!

 இந்த விருதில் ரூ. 1,00,000, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை கேரளா அரசு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

 இந்த விருதில் ரூ. 1,00,000, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை கேரளா அரசு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழ்ப்படம் ஒன்றுக்கு ஆங்கில பாடலை கம்போஸ் செய்து அசத்தியுள்ளார் இசைஞானி இளையராஜா.

    துரை பாண்டியன் என்பவரது இயக்கத்தில் உருவாகி வரும் படம் முன்பதிவு. இந்தப் படத்தில் கிராமத்து இளைஞர்கள் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகின்றனர். அதில் நாயகி கலந்து கொள்ளும் காட்சியில் அவரது கவனத்தை ஈர்க்க இளைஞர்கள் சிலர் ஆங்கிலப் பாடல் பாடுவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் காட்சிக்காக இசையமைப்பாளர் இளையராஜா ஆங்கிலப்பாடல் கம்போஸ் செய்துள்ளார். இந்தப் பாடலை டாக்டர் சௌமோ கோஷல் என்பவர் எழுதியுள்ளார்.

    கிராமத்து இளைஞரகள் பர்கர் சாப்பிட ஆசைப்படுவதும், நகரத்து இளைஞர்கள் கிராமிய வாழ்க்கை வாழ ஆசைப்படுவதையும் உணர்த்துவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளதாம். முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வரும் இந்த படத்தில் இயக்குனர் கவுதமன் மகன் தமிழ் ஒரு முக்கிய வேடத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

    ஆலயா கிரியேஷன்ஸ் சார்பில் அன்பரசன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்ச்லால் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்.

    வீடியோ பார்க்க: நீட் தேர்வு - நடிகை ஜோதிகா கேள்வி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: