வெற்றிமாறன் - சூரி படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா

வெற்றிமாறன் - சூரி படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா

வெற்றிமாறன் - இளையராஜா

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
அசுரன் பட வெற்றியை அடுத்து ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி படத்தின் ஒரு கதையை இயக்கிய வெற்றிமாறன், சூர்யாவின் வாடிவாசல், சூரி நாயகனாக நடிக்கும் படம், அதை அடுத்து மீண்டும் தனுஷ் உடன் கூட்டணி என பிஸியாகியுள்ளார். இதனிடையே நடிகர் விஜய்க்கு கதை ஒன்றை தயார் செய்து வருவதாகவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதில் முதலாவதாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். இந்தப் படத்துக்காக நடிகர் சூரி சிக்ஸ் பேக் வைத்து தனது உடலமைப்பை மாற்றியிருந்தார் சூரி. பூமணியின் ‘வெக்கை’ நாவலை அசுரன் என்ற திரைப்படமாக்கிய வெற்றிமாறன் மீண்டும் ஒரு சிறுகதையை மையப்படுத்தித் தான் சூரியின் படத்தையும் இயக்குகிறார்.

கோ, கவண் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த எல்ரெட் குமார் சூரி நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை வெற்றிமாறனின் 5 படங்களில் வடசென்னைக்கு மட்டும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மீதமிருக்கும் 4 படங்களுக்குமே ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்திருப்பார். வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி எப்படி தொடர் வெற்றிகளைக் குவித்ததோ அதைப்போலத் தான் ஜி.வி- வெற்றிமாறன் இசைக்கூட்டணியும் தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறது.

மேலும் படிக்க: ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு நாள் குறித்த ரஜினிகாந்த்

சூரி நாயகனாக நடிக்கும் படத்தின் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், அடுத்த வாரம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: