இளையராஜா இசையில் ’சிரஞ்சீவியின் பொன்னியின் செல்வன்’ வெப் சீரிஸ்

இசைஞானி இளையராஜா

திரைக்கதை, வசனம், ஓவியங்கள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என முழு உருவாக்கத்தையும் பார்த்த இளையராஜா உடனடியாக இசையமைக்க சம்மதித்தார்.

 • Share this:
  இசைஞானி இளையராஜா ‘சிரஞ்சீவியின் பொன்னியின் செல்வன்’ என்ற வெப் சீரிஸுக்கு இசையமைக்கிறார்.

  இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக இயக்கி வருகிறார். இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் ’பொன்னியின் செல்வன்’ வலை தொடராகவும் உருவாகியுள்ளது. இதற்கு ’சிரஞ்சீவியின் பொன்னியின் செல்வன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

  இதனை அஜய் பிரதீப் ஒளிப்பதிவு செய்து, திரைக்கதை வசனம் எழுதி டைரக்டும் செய்கிறார். திரைப்பட கல்லூரி மாணவரான அஜய் பல விளம்பர படங்களை இயக்கியுள்ளார். 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கே.எஸ்.பிரசாத்துடன் பணியாற்றியும் இருக்கிறார்.

  “1979-களில் இருந்து பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அது நடக்காமல் போனதால் தற்போது சிரஞ்சீவியின் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் வலைத்தொடர் இயக்கும் முயற்சியில் இருக்கிறேன். அதன் திரைக்கதை, வசனம், ஓவியங்கள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என முழு உருவாக்கத்தையும் பார்த்த இளையராஜா உடனடியாக இசையமைக்க சம்மதித்தார். இந்த வெப் தொடர் 4 மாதங்கள் ஒளிபரப்பாகும். இதில் சாபுசிரில் கலை இயக்குனராகவும் ஆண்டனி எடிட்டராகவும் பணியாற்றுகின்றனர். நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஆகஸ்டு மாதம் படப்பிடிப்பு தொடங்கி, அடுத்த வருடம் ஏப்ரலில் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்தத் தொடர் உருவாகிறது” என்று தெரிவித்துள்ளார் அஜய்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: