Home /News /entertainment /

மனைவியிடம் பேசினால் கூட வரி விதிக்க வாய்ப்பு உள்ளது - நடிகர் செந்தில் பேச்சு!

மனைவியிடம் பேசினால் கூட வரி விதிக்க வாய்ப்பு உள்ளது - நடிகர் செந்தில் பேச்சு!

நடிகர் செந்தில்

நடிகர் செந்தில்

மனைவியிடம் பேசினால் கூட இனி வரிவிதிக்கப்படும் என்று நகைச்சுவை நடிகர் செந்தில் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் அது உங்கள் பணம் என்று நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில்  நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி, மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ., மாரியப்பன் கென்னடி ஆகியோரை ஆதரித்து பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் இன்று வாக்கு சேகரித்தார்.

மானாமதுரை , திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார் செந்தில் பேசுகையில் மோடி ஆட்சியில் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டலில் சாப்பிட்டால் கூட வரி என்று கூறிய செந்தில், இனி மனைவியிடம் பேசினால் கூட வரி விதிக்க வாய்ப்புள்ளது என்று விமர்சித்தார்.

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறிய செந்தில் அது உங்கள் பணம் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதாவின் உருவ படத்தை சட்டப்பேரவையில் திறக்க கூடாது என்று கூறிய தேமுதிகவுடனும், ஜெயலலிதாவை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறிய பாமகவுடனும் கூட்டணி வைத்து துரோகம் செய்துள்ளனர் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என்று தெரிவித்தார்.

Also see...






சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vinothini Aandisamy
First published:

Tags: AMMK, Elections 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Key Constituency, Tamil Nadu Lok Sabha Elections 2019

அடுத்த செய்தி