ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினி படத்தை இயக்குவீர்களா? தனுஷின் அசத்தல் பதில்!

ரஜினி படத்தை இயக்குவீர்களா? தனுஷின் அசத்தல் பதில்!

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ரஜினி நடிப்பில் படம் இயக்குவீர்களா? என்ற கேள்விக்கு நடிகர் தனுஷ் பதிலளித்திருக்கிறார்.

  வடசென்னை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் நடைப்பெற்றது. விழாவில் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், அமீர், நடிகர்கள் தனுஷ், ஐஸ்வரியா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  அப்போது பேசிய தனுஷ், ``வடசென்னை திரைப்படம் பற்றி முதலில் நானும் இயக்குனர் வெற்றிமாறனும் பேசியபோது எதுவும் சரியாக அமையவில்லை. வெற்றிமாறன் என்னிடம் சிம்புவை வைத்து வடசென்னை படத்தை தொடங்க போவதாகக் கூறினார். அதற்கு நானும் சரி என்று சொன்னேன்”என்று பேசினார்.

  மேலும் ``அதன் பிறகு, வெற்றிமாறன் வந்து படத்தில் ஹீரோ சிம்புக்கு எதிரான முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்று உள்ளது. நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு நான், சார் எனக்கு பெருந்தன்மை உண்டு. ஆனால் அந்தளவுக்குப் பெருந்தன்மை கிடையாது என்று சொல்லிவிட்டேன்” என்று தனுஷ் கூறினார்.

  பிறகு வடசென்னை படத்தில் நடிக்கும் வாய்ப்பு தன்னிடமே மறுபடியும் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது எனக் கூறிய தனுஷ், படத்தில் அமீரின் நடிப்பு அற்புதமாக இருப்பதாக புகழ்ந்தார். சமுத்திரக்கனி, ஐஸ்வரியா ராஜேஷும் சிறப்பாக நடித்துள்ளதாக தனுஷ் தெரிவித்தார்.

  ரஜினி நடிப்பில் படம் இயக்குவீர்களா என்று தனுஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தனுஷ், ``அந்த வாய்ப்பு கிடைத்தால் ஓகே தான். நானா வேண்டாம் என்று சொன்னேன். அதுபோன்ற வாய்ப்பு எல்லாம் அமைய வேண்டும். அது ஒர் ஆசீர்வாதம். எந்தெந்த அரிசியில் யார் யார் பெயர் எழுதியிருக்கிறதோ, அது அவர்களுக்கு போய்ச் சேர வேண்டும். எதிர்காலத்தில் அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் அதைவிட வேறு என்ன வேண்டும்” என்று கூறினார்.

  பவர் பாண்டி படத்தை அடுத்து நடிகர் தனுஷ் தற்போது ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Dhanush, Rajinikanth, Simbu, Vada chennai, Vetrimaran