முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கெட்ட விஷயங்கள் நடந்தால், பல நல்ல செயல்களால் அதை ஈடுசெய்வதுதான் சிறந்தது - ஏ.ஆர்.ரஹ்மான்..

கெட்ட விஷயங்கள் நடந்தால், பல நல்ல செயல்களால் அதை ஈடுசெய்வதுதான் சிறந்தது - ஏ.ஆர்.ரஹ்மான்..

ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஹ்மானுக்கு பலரும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் HappyBirthdayARRahman என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் திரையுலக இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்தது மட்டுமில்லாமல், தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை பெற்று, சர்வதேச அரங்கில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஏ.ஆர். ரஹ்மான். பாடல்களில் அவர் செய்த மேஜிக் கொஞ்ச நஞ்சமல்ல, இசையால் உலகை அவர் உண்மையில் கட்டிபோட்டுள்ளார். 

இசை மேஸ்ட்ரோ ஏ.ஆர். ரஹ்மான் (Music Maestro AR Rahman) பேசிய வீடியோ ஒன்றில் “பெரும்பாலும், இசை அல்லது கல்வி பற்றி நான் கற்றுக்கொண்டவை அனைத்தும் வாழ்க்கையிலிருந்துதான். நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயங்கள் வாழ்க்கை பயணத்தில் என்னால் கண்டுபிடிக்கப்பட்டன என்று கூறியுள்ளார். மேலும் "என் தந்தை விலை உயர்ந்த கீபோர்டை வைத்திருந்தார் என்றும், நான் அந்த கீபோர்டை ஆழமாக கற்க ஆரம்பித்தபோது, எனது ஆர்வம் எங்குள்ளது என்பதை அப்போது நான் கண்டுபிடித்தேன். அதைத்தான் இப்போது நான் என்ன செய்துவருகிறேன்” என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

ரஹ்மான் தனது இசை பயணத்தை பற்றி மேலும் பேசுகையில் "எனது இசை ஒரு அமெரிக்க, அரபு, இந்தியன், பாகிஸ்தான், பங்களாதேஷ், தென்னிந்திய அல்லது வட இந்தியருடன் (American, Arab, Indian, Pakistani, Bangladeshi, south Indian or a north Indian) இணைகிறது, ஏனெனில் நிபந்தனையற்ற முறையில் என் இசையின் நோக்கம்,  தூய்மை மற்றும் அன்பை நோக்கி என்னை இயக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்". 

' isDesktop="true" id="390299" youtubeid="nFT_rM7YGgg" category="entertainment">

மேலும் இந்த தருணத்தில் தான், இசையமைப்பாளர், இசைக்கலைஞர், பாடகர் மற்றும் இசை தயாரிப்பாளர் (composer, musician, singer and music producer) என்ற பெயரால் அழைக்கப்படுவதற்கு என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்று ரஹ்மான் (Rahman)  கூறினார். இந்த இசையால் சமூகத்தில் தான் “மரியாதை, ஆஸ்கார் விருதுகள், கிராமி விருதுகள், அன்பு, பணம், புகழ் மற்றும் பல விஷயங்களை பெற்றுள்ளதாக கூறினார். கஷ்ட காலங்களில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை  ரஹ்மான் பின்வருமாறு கூறுகிறார். 

"உங்களுக்கு 40 வயதாகும்போது, நீங்கள் ஒரு நிலையை அடைகிறீர்கள், நீங்கள் மரணத்தை நோக்கிச் செல்வதைப் போல உணர்கிறீர்கள். சில நேரங்களில் இனி வாழக்கூடாது என்ற பயத்தில், பலவற்றைச் செய்யத் தொடங்க பலரைத் தூண்டுகிறது” இந்த நேரத்தில், நீங்கள் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டதை மட்டுமே நினைத்து பார்க்கவேண்டும்" அதோடு  நீங்கள் இப்போது இந்த நிலையில் இருப்பதற்கு இறையின் ஆசியே காரணமா என்று எண்ணி மகிழ்ச்சிகொள்ளுங்கள்" வேண்டும் இசைப்புயல் கூறியுள்ளார்.

கெட்ட காரியங்கள் நடந்தால், பல நல்ல செயல்களால் அதை ஈடுசெய்வது சிறந்தது. உதாரணாமாக 'X' என்ற ஒரு மோசமான விஷயம் நடந்தால், அதற்கு நாம் எப்போதும் 10x அல்லது 20x நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும். நீங்கள் ஏதாவது மோசமான செயலைச் செய்திருந்தாலும், அதைப் பற்றி குற்ற உணர்ச்சியடைய வேண்டாம். 

உங்கள் வாழ்க்கையில் ஒரு கடினமான சூழ்நிலை இருக்கும்போது, இந்த யோசனையை கவனியுங்கள்: உங்கள் மனதை இலகுவாக்குங்கள், முதலில் சோகத்திலிருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளுங்கள், எப்போதும் பாசிட்டிவான பாதையில் நடக்க தைரியமாக இருந்தால் வாழ்வில் நீங்கள் நிச்சயமாக பரிபூரண நிலையையும் சூப்பரான ரிவார்டுகளையும் பெறுவீர்கள்” என்று பத்ம பூஷண் விருது பெற்றுள்ள ரஹ்மான் (Rahman) கூறுகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஹ்மானுக்கு பலரும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் HappyBirthdayARRahman என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது

First published:

Tags: AR Rahman, Happy BirthDay, Music director ar rahman