• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர்கள் அரசியல் பேசினால் பின்விளைவுகள் ஏற்படும்: லஷ்மி ராமகிருஷ்ணன்

நடிகர்கள் அரசியல் பேசினால் பின்விளைவுகள் ஏற்படும்: லஷ்மி ராமகிருஷ்ணன்

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்

மஞ்சுவின் கருத்துக்களை ஆமோதித்த லஷ்மி ராமகிருஷ்ணன் பேசுகையில், நாம் பரினாம வளர்ச்சி அடையும் போது தான் போராட்டங்களை தேர்ந்தெடுக்க முடியும். நீங்கள் நடிகராக கருத்துக்களை தெரிவிக்கும் போது அதற்கான விலையையும் கொடுத்தே தீர வேண்டியுள்ளது என்றார்.

  • Share this:
வலுவான கருத்துக்களை முன்வைப்பவர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வதுடன், என்ன மாதிரியான பின் விளைவுகளை எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து India Today Conclave South 2021 என்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் விவாதம் நடைபெற்றது. இதில் நடிகைகள் லஷ்மி ராமகிருஷ்ணன், லக்‌ஷ்மி மஞ்சு, நடிகர் சேத்தன் குமார் மற்றும் எழுத்தாளர் பூ.கோ.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முதலில் பேசிய கன்னட நடிகரும் செயற்பாட்டாளருமான சேத்தன் குமார், நடிகர்கள் அரசியல் பேசினால் தொழில் ரீதியாக பாதிப்பை சந்திக்கின்றனர். இந்தியாவில் கலையும் அரசியலும் பின்னிப்பிணைந்திருப்பதாக நான் உணர்கிறேன், அவை அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. தேவதாசி முறையில் பெண்களும், தலித்களும் சுயநலத்திற்காக பயன்பட்டனர், அதைப்போலவே அரசியலில் கலையும் என்றார்.

நடிகையும், தயாரிப்பாளருமான லக்‌ஷ்மி மஞ்சு பேசுகையில், வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னேற நமக்கு இடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். நான் திரைத்துறையில் பிறந்து வளர்ந்தவன். என் அப்பா [மோகன் பாபு] பள்ளியில் உதவி இயக்குநராகவும், பள்ளி ஒன்றில் ஊழியராகவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்படித்தான் அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் எங்களுக்கான வழிகளை உருவாக்கினார். எல்லாம் சரியாக இருக்கும் ஒரு தொழிற்துறையை நாம் இன்னும் காணவில்லை. நாம் சில நோக்கத்திற்காக இதில் நுழைந்துள்ளோம். போராட்டங்களை தேர்ந்தெடுங்கள், அரசின் பின்னால் செல்வதால் பின் விளைவுகள் தான் ஏற்படும், நம் பிரதான நோக்கம் மக்களை மகிழ்விப்பதே என்றார்.

ஆந்திரா - தெலங்கானா பிரிவினையின் போது ஒரு தரப்புக்கு ஆதரவாக இருந்ததால் எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டது. எனவே எவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கிறேன் என்றார்.

மஞ்சுவின் கருத்துக்களை ஆமோதித்த லஷ்மி ராமகிருஷ்ணன் பேசுகையில், நாம் பரினாம வளர்ச்சி அடையும் போது தான் போராட்டங்களை தேர்ந்தெடுக்க முடியும். நீங்கள் நடிகராக கருத்துக்களை தெரிவிக்கும் போது அதற்கான விலையையும் கொடுத்தே தீர வேண்டியுள்ளது. ஆனால் அப்போது தான் உங்கள் ஆளுமை வெளிப்படும். எவ்வித போராட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பது உங்களின் தனித்தன்மையை பொறுத்தது. கலையையும் அரசியலையும் தனித்தனியாக வைத்திருப்பது கட்டாயமாகும்.

கோலிவுட்டில் என்னற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். ஒரு தலைவராக வேண்டுமெனில் நீங்கள் வித்தியாசமான சிந்தனை கொண்டவராக இருக்க வேண்டும். அப்படி ஒரு சிந்தனைமிக்கவராக இருப்பது மட்டுமே நல்ல தலைவராவதற்கான தகுதியா?

அரசியல்வாதியாக இருப்பதற்கு தனித்துவமான திறமை தேவைப்படுகிறது. திரைக்கலைஞராக இருப்பது அரசியலில் எளிதில் நுழைவதற்கான வாய்ப்பை தருகிறது.. மக்களின் அடிப்படை பிரச்னைகளை புரிந்து கொள்ள வேண்டும். அரசுக்கு பிரச்னைகளை சுட்டிக்காட்டுவது சுலபம், ஆனால் அது சரியாக இருக்காது. உங்களின் வளர்ச்சியை அது தடுத்துவிடும். உங்கள் பேச்சின் பின்விளைவுகளுக்காக வருந்த வேண்டாம். ஒரு நடிகராக உங்கள் பொறுப்பு நடிப்பு மட்டுமே.

ஆனா; ஒரு நட்சத்திரமாக உங்களின் பொறுப்பு மேம்படுகிறது. ஆனால் பின் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று லஷ்மி ராமகிருஷ்ணன் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: