• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கலர்ஸ் தமிழில் துவங்கியது இதயத்தை திருடாதே சீசன் 2... ரசிகர்கள் உற்சாகம்!

கலர்ஸ் தமிழில் துவங்கியது இதயத்தை திருடாதே சீசன் 2... ரசிகர்கள் உற்சாகம்!

இதயத்தை திருடாதே

இதயத்தை திருடாதே

ரசிகர்களின் பேராதரவு பெற்று சமீபத்தில் முடிவடைந்த இதயத்தை திருடாதே சீரியலின் சீசன் 2 தற்போது கலர்ஸ் தமிழில் நேற்று முதல் ஒளிபரப்பாக துவங்கி உள்ளது.

  • Share this:
தமிழ் சின்னத்திரை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் மக்களை கவரும் வகையில் வித்தியாசமான கதைக்களங்களுடன் கூடிய சீரியல்களும் அடங்கும். கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான சீரியலில் சுமார் 600-க்கும் மேற்பட்ட எபிசோட்களை கடந்து ரசிகர்களின் பேராதரவு பெற்று ஒளிபரப்பான வெற்றிகரமான சீரியல் இதயத்தை திருடாதே. சமீபத்தில் தான் இதயத்தை திருடாதே சீரியல் நிறைவடைந்தது. இந்த சீரியல் கடந்தாண்டு பிப்ரவரி முதல் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பானது.

கலர்ஸ் மராத்தியில் ஹிட்டான ஜிவ் ஜலா ஏடே பிசா சீரியலை ரீமேக் செய்தே இதயத்தை திருடாதே சீரியலை கலர்ஸ் தமிழ் ரிலீஸ் செய்தது. வழக்கமான கதைக்களத்துடன் இல்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக `கல்யாணம்' என்ற பெயரில் இருவரின் வாழ்க்கை பகடைக்காயாக்கப்படும் கதையாக இருந்தது இதயத்தை திருடாதே. கும்பகோணத்தில் அரசியல் ரீதியாக எப்போதும் எதிரும் புதிருமாக இருக்கும் இரு அரசியல்வாதிகளான வானவராயன் மற்றும் தாட்சாயிணி ஆகிய இருவரின் பதவிவெறிக்கு இடையில் மாட்டி கொண்ட சிவா மற்றும் சஹானா ஆகிய இருவரின் காதல் கதையை விவரித்தது. ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பல சீரியல்கள் சின்னத்திரையில் தற்போது சீசன் 2-வாக வேறு வேறு நடிகர்கள் மற்றும் வேறு கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி ரசிகர்களை மீண்டும் ஈர்த்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



 




View this post on Instagram





 

A post shared by Colors Tamil (@colorstvtamil)






இந்நிலையில் ரசிகர்களின் பேராதரவு பெற்று சமீபத்தில் முடிவடைந்த இதயத்தை திருடாதே சீரியலின் சீசன் 2 தற்போது கலர்ஸ் தமிழில் நேற்று முதல் ஒளிபரப்பாக துவங்கி உள்ளது. மற்ற சீரியல்களின் சீசன் 2-வை போல் இல்லாமல் இதிலும் வித்தியாசம் காட்டியுள்ளது கலர்ஸ் தமிழ். முதல் சீசனில் உடைத்த அதே கேரக்டரில் நவீன் குமார் மற்றும் ஹிமா பிந்து ஆகியோர் சிவா மற்றும் சஹானாவாக தொடர்கின்றனர். சீசன் 1-ன் நிறைவில சிவாவை போலீஸ் கைது சென்று கூட்டி செல்வதை போல காட்டப்பட்ட நிலையில், அதிலிருந்து 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடரும் கதையாக நேற்று முதல் ஒளிபரப்பாக துவங்கி இருக்கிறது இதயத்தை திருடாதே சீசன் 2. போலீசால் அரெஸ்ட் செய்யப்பட்ட சிவா இந்த இரண்டாம் அத்தியாயத்தில் "கிங்" என்ற பெயரில் பெரிய ரவுடியாக காட்டப்படுகிறார்.

Also read... "இறுதியாக கடின உழைப்பு பலனளிக்கிறது" உடல் எடையை குறைத்த நடிகை சமீரா ரெட்டி உற்சாகம்!

அவரது மனைவியாக இருக்கும் சஹானா பெரிய தொழிலதிபராக வளர்ந்து தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இருக்கிறார். மகள் ஐஸ்வர்யாவுக்கு தந்தை சிவாவை பற்றிய விவரங்கள் ஏதும் சொல்லாமலே சஹானா வளர்த்து வருவதாக கதை நகர்கிறது. தனது அப்பாவை பற்றி தெரிந்து கொள்வதில் ஐஸ்வர்யா மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். ஆனால் சிவாவை பற்றிய சிறிய தகவல் கூட தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு தெரிந்து விட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் சஹானா. இதயத்தை திருடாதே சீசன் 1 ரசிகர்களை கவர்ந்தது போல சீசன் 2-வும் ரசிகர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: