இதயத்தை திருடாதே தொடரின் காதலர் தினம் சிறப்பு பாடல் வெளியீடு.. #EnnadiBabyma 😍

இதயத்தை திருடாதே தொடரின் காதலர் தினம் சிறப்பு பாடல் வெளியீடு.. #EnnadiBabyma 😍

இதயத்தை திருடாதே சீரியல்

Idhayathai Thirudathey | Colors Tamil | இதயத்தை திருடாதே சீரியல் குழு காதலர் தினத்தை முன்னிட்டு’என்னடி பேபிமா’ என்ற சிங்கிள் ட்ராக்கை ரிலீஸ் செய்துள்ளது.

  • Share this:
திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ,அதே அளவிளான வரவேற்பு சீரியல்களுக்கும் தற்போது இருக்கிறது.அதனால் சீரியலில் நடிக்கும் பிரபலங்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.அந்த வகையில் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு  ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.அதிலும் இதயத்தை திருடாதே சீரியலுக்கு சற்று ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும்.

இந்த சீரியல் கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஒளிப்பரப்பாக தொடங்கியது.அன்று முதல் இன்று வரை இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தனது முதலாம் ஆண்டு அனிவர்சரியை கொண்டாடும் இதயத்தை திருடாதே சீரியல் குழு ஸ்பெஷல் சிங்கிள் ட்ராக் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளது.’என்னடி பேபிமா’ என்ற இந்த பாடல் இன்று காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்களுக்கு ட்ரீட் ஆக அமைந்துள்ளது.


இந்த சீரியல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணி முதல் - 9.30 மணி வரை ஒளிப்பரப்பாகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published: