"இதயத்தை திருடாதே" 500வது எபிசோட் கொண்டாட்டம் - முக்கிய பிரபலங்கள் நெகிழ்ச்சி!

இதயத்தை திருடாதே சீரியல்

காதல், சண்டை, பரபரப்பு, அதிரடி திருப்பம் என விறுவிறுப்பான கதை நகர்வுகளால், மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காதல் தொடரான இதயத்தை திருடாதே 500வது எபிசோடை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

கலர்ஸ் தமிழில் நாள்தோறும் இரவு 8.30 மணிக்கு இதயத்தை திருடாதே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. காதலை மையப்படுத்தி இளசுகளை குறிவைத்து ஒளிப்பரப்பாகும் இந்த தொடர் 500வது எபிசோடை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடரில் நாயகனாக நவீன்குமார், நாயகியாக பிந்து ஆகியோர் நடித்து வருகின்றனர். ராதாகிருஷ்ணன் இயக்கி வருகிறார். காதல், சண்டை, பரபரப்பு, அதிரடி திருப்பம் என விறுவிறுப்பான கதை நகர்வுகளால், மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

மாமியார் - மருமகள் சண்டையை தீம்மாக வைத்து பெரும்பாலான தொலைக்காட்சி சீரியல்கள் உருவான நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் - மீனாட்சி' தொடர் அந்த டிரெண்டை மாற்றியது. வீட்டில் இருக்கும் வயதானவர்கள், பெரியவர்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள் என்ற மைன்ட் செட்டை உடைந்து இளசுகளையும் சீரியல் பக்கம் இழுத்தது. பருவ வயதில் இருக்கும் இளசுகள், தங்களின் காதலை சொல்வதற்கு டிப்ஸ் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'ஆபிஸ்' தொடர் வரப்பிரசாதமாக இருந்தது. அந்த இரண்டு தொடர்களும் இல்லாத இடத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் 'இதயத்தை திருடாதே' தொடர் நிரப்பி வருகிறது.

மக்களின் அமோக வரவேற்பால், தற்போது 500வது எபிசோடையும் கடந்திருப்பதால், ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நாடகத்தில் நடித்து வரும் நட்சத்திரங்கள் தங்களின் வாழ்த்துகளையும் நன்றியையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். நடிகை கார்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில், இதயத்தை திருடாதே தொடரின் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த தொடரை வெற்றிகரமாக மாற்றிய ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ள அவர், அவர்கள் இல்லாமல் இந்த தொடரின் வெற்றி சாத்தியமில்லை என அகம் மகிழ்ந்து கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து ஆதரவை நல்குமாறும் கார்த்திகா கேட்டுக்கொண்டுள்ளார்.

Also read... பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்த பிரகதி குருபிரசாத்!

கதையின் நாயகன், காதல் இளவரசன் நவீன்குமார் எழுதியுள்ள பதிவில், இதயத்தை திருடாதே தொடர் 500வது எபிசோடை நிறைவு செய்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். தொடரின் குழு மற்றும் குடும்பத்தினர், ரசிகர்கள் அனைவரிடமும் தன்னுடைய அளவுகடந்த அன்பை பகிர்ந்து கொள்வதாக கூறியுள்ளார். 
View this post on Instagram

 

A post shared by J.NAVIN KUMAR (@navinactor_official)


கொரோனா காரணமாக 500வது எபிசோடை பெரிய விழாவாக கொண்டாட முடியவில்லை என்றாலும், இந்த வெற்றி தங்களுக்கு மேலும் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும், இன்னும் பல அதிரடி திருப்பங்கள் இருக்கும் எனவும் இதயத்தை திருடாதே குழுவினர் தெரிவித்துள்ளனர். கும்பகோணத்தில் உள்ள இரு அரசியல்வாதிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் நாயகன் மற்றும் நாயகியின் காதல், என்னென்ன திருப்பங்களையும், சுவாரசியங்களையும் சந்திக்கிறது என்பதை கதையின் சுருக்கம். விறுவிறுப்பான இந்த கதைக்களத்தை இயக்குநர் ராதாகிருஷ்ணன் சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். இந்த ஆண்டு நிறைவடைந்த காதலர் தினத்துக்கு ஸ்பெஷல் சாங் ஒன்றையும் இதயத்தை திருடாதே குழு வெளியிட்டது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: