டிவி ரசிகர்களை கவரும் வகையில் தமிழ் சேனல்களில் ஏராளமான நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன.
இவற்றில் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து உள்ளன சீரியல்கள். ரசிகர்களுக்கு அலுப்பு ஏற்படாத வகையில் பல்வேறு வித்தியாசமான கதை களங்களுடன் ஒளிபரப்பாகிய பல மெகா சீரியல்கள் முடிவடைந்த பின்னரும் கூட, ரசிகர்களின் மனதை விட்டு இன்னும் நீங்காமல் உள்ளன.
பிரபல முன்னணி தமிழ் சேனல்களில் ஒன்றான கலர்ஸ் தமிழ் சேனலில் ஏராளமான சீரியல்கள். இதில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட சீரியல்கள் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளன. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான சீரியலில் ரசிகர்களின் பேராதரவு பெற்று ஒளிபரப்பான வெற்றிகரமான ஒரு சீரியல் இதயத்தை திருடாதே. கலர்ஸ் மராத்தியில் ஹிட்டான ஜிவ் ஜலா ஏடே பிசா சீரியலை ரீமேக் செய்தே இதயத்தை திருடாதே சீரியலை கலர்ஸ் தமிழ் ரீமேக் செய்தது. வழக்கமான கதைக்களத்துடன் இல்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக `கல்யாணம்' என்ற பெயரில் இருவரின் வாழ்க்கை பகடைக்காயாக்கப்படும் கதையாக இருந்தது இதயத்தை திருடாதே.
Read More : பிரபலங்கள் இருவரின் காம்போவில் உருவாகும் புதிய திரைப்படம் - ரசிகர்கள் ஆவல்!
இதயத்தை திருடாதே சீரியல் முடிக்கப்பட்டு, அதே முன்னணி நடிகர்களுடன் இதயத்தை திருடாதே சீரியலின் இரண்டாம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலில் ஹீரோயினாக நடிகை ஹிமா பிந்து, சஹானா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். நடிகர் நவீன் குமார், சிவா என்ற கேரக்டரில் நடிக்கிறார். சிவா - சஹானா ஆகிய இருவரின் குழந்தையாக ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் குழந்தை நட்சத்திரம் ஆழியா நடித்து வருகிறார்.
குழந்தை ஆழியாவின் சுட்டித்தனமான நடிப்பால் அவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இதயத்தை திருடாதே சீரியல்களின் பல எபிசோட்கள் ஆழியா வரும் சீன்களால் களைகட்டும். இதனிடையே இதயத்தை திருடாதே சீரியல் ரசிகர்களுக்கு வருத்தமான ஒரு செய்தி என்னவென்றால் குழந்தை ஆழியா, இந்த சீரியலை விட்டு விலகுகிறார். 8 வயது சிறுமியான ஆழியா சன் டிவி-யில் ஒளிபரப்பான நாயகி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
தனது கியூட் எக்ஸ்பிரஷன் மற்றும் அழகான பேச்சு, இயல்பான நடிப்பால் பல டிவி ரசிகர்களை ஈர்த்து உள்ளார். மேலும், குழந்தை நட்சத்திரமான ஆழியா ஒரு சில வெப் சீரிஸ்கள் மற்றும் சில ஷார்ட் ஃபிலிம்களிலும் நடித்துள்ளார். யூடியூபிலும் பாப்புலராக உள்ள ஆழியா, பல விளம்பரங்களிலும் நடித்து உள்ளார்.
இந்நிலையில் இதயத்தை திருடாதே சீரியலில் ஆழியாவின் காட்சிகள் அனைத்தும் ஷூட்செய்து முடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் ஆழியாவின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது மொத்த சீரியல் குழுவினர் சேர்ந்து கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து பிரியா விடை அளித்து உள்ளனர். இது தொடர்பான போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. ஐஷு-வை நாங்கள் அனைவரும் மிஸ் செய்ய உள்ளோம் என்று இதயத்தை திருடாதே ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.