• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • டிஜிட்டலில் வெளியாகும் சித்தார்த்தின் ‘டக்கர்’...?

டிஜிட்டலில் வெளியாகும் சித்தார்த்தின் ‘டக்கர்’...?

டக்கர் திரைப்பட போஸ்டர்

டக்கர் திரைப்பட போஸ்டர்

இயக்குநர் ஜி.கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டக்கர்’ திரைபடத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

  • Share this:
    ’பொன்மகள் வந்தாள்’ படத்தைத் தொடர்ந்து ’டக்கர்’ திரைப்படமும் டிஜிட்டலில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழ் சினிமா முற்றிலும் முடங்கியுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் படங்களை வெளியிட முடியாமல் தவிக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

    இதனிடையே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களை கருத்தில் கொண்டு OTT நிறுவனங்கள் புதிய படங்களை டிஜிட்டலில் வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால் திரைப்படத்தை OTT தளத்தில் வெளியிட திட்டமிட்டார்கள். இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாரதிராஜா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் படத்தை டிஜிட்டலில் வெளியிட ஆதரவு அளித்தனர்.

    இந்நிலையில் பொன்மகள் வந்தால் படத்தை அடுத்து சித்தார்த் நாயகனாக நடித்த டக்கர் திரைப்படத்தையும் அமேசான் பிரைம் நிறுவனம் நல்ல விலை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இத்தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இயக்குநர் ஜி.கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆக்‌ஷன், காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக திவ்யான்ஷா கௌசிக் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ஆர்.ஜே.விக்னேஷ், முனீஷ்காந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: