அடுத்தப் பிறவியில் ஓவியனாய் பிறக்கவே விரும்புகிறேன்! நடிகர் சிவகுமார்

மோனிஷா செல்வகுமார் என்கின்ற தனிநபர் 1200 அடி நீளத்திற்கு வரையப்பட்ட சித்திரத்தை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்ய நடந்த நிகழ்ச்சியில் சிவகுமார் கலந்து கொண்டார்.

அடுத்தப் பிறவியில் ஓவியனாய் பிறக்கவே விரும்புகிறேன்! நடிகர் சிவகுமார்
நடிகர் சிவகுமார்
  • News18
  • Last Updated: September 21, 2019, 7:32 PM IST
  • Share this:
நடிகர் சிவகுமார் தான் ஓவியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றும் மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் ஓவியனாய் பிறக்கவே ஆசைப்படுகிறேன் என நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது பேசியுள்ளார்.

மோனிஷா செல்வகுமார் என்கின்ற தனிநபர்
1200 அடி நீளத்திற்கு வரைந்த ஓவியத்தை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற செய்யவைக்க உள்ளார் செம்மொழி பூங்காவில் நடைபெற்ற


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மோனிஷா செல்வன் பேசிய போது,  “ஒருவருடமாக இப்படங்களை வரைந்தேன். நான் வரைந்தேன் என்பதற்காக முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய இம்முயற்சிக்கு என் அப்பா முழு உறுதுணையாக இருந்தார். நான் விட்டுவிடலாம் என நினைக்கும் போது என் அப்பா என்னை ஊக்கப்படுத்தினார் “ என்றுக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து நடிகர் சிவக்குமார் மேடையில் பேசியபோது, ’ஓவியக் கல்லூரி படிக்கும் போது தான் தெரிந்தது ஓவியத்திற்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்று. ஆனால் நான் ஓவியன் என்று சொல்ல பெருமைக் கொள்கிறேன். மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் நடிகனாய் அல்ல ஓவியனாய் பிறவி எடுக்கவே விரும்புகிறேன்” என்றார்.பார்க்க..

இஸ்ரோ தலைவர் சிவனின் கதை...

First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading