Home /News /entertainment /

நான் இயக்க விரும்பும் நடிகர் விஜய்தான்: தேசிய விருதுபெற்ற இயக்குநர் விருப்பம்!

நான் இயக்க விரும்பும் நடிகர் விஜய்தான்: தேசிய விருதுபெற்ற இயக்குநர் விருப்பம்!

விஜய்

விஜய்

விஜயை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்? நீங்களும் விஜயும் இணையும் படம் என்ன மாதிரி இருக்கும் என்று சேரனிடம் கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    நான் இயக்க ஆசைப்படும் ஹீரோ நடிகர் விஜய்தான் என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

    பாரதிகண்ணம்மாவில் தொடங்கி பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் என பல படங்களைக் கொடுத்த இயக்குநர் சேரன் கடைசியாக ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை கடந்த 2015-ம் ஆண்டில் எடுத்திருந்தார். தற்போது திருமணம் என்ற படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.

    இந்தப் படத்தில் தம்பி ராமையா மகன் உமாபதி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இதில் சுகன்யா, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மார்ச் 1-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இந்தநிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் படத்தின் இயக்குநர் சேரன், தனியார் பண்பலை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரின் திரைப்பயணம் குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதில், நீங்கள் இயக்க விரும்பும் நடிகர் யார் என்ற கேள்வியும் இடம்பெற்றது. அதற்கு சட்டென்று பதிலளித்த சேரன் நடிகர் விஜய் பெயரைக் கூறினார்.



    அவருக்கு கதை தயாராக இருக்கிறதா? அவரிடம் சொல்லியிருக்கிறீர்களா என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் சேரனிடம் கேட்க, கதை தயாராக இருக்கிறது என்று கூறினார்.

    மேலும் விஜயை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்? நீங்களும் விஜயும் இணையும் படம் என்ன மாதிரி இருக்கும் என்று சேரனிடம் கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், சமூக மாற்றத்திற்கான கதையை ஒருநடிகர் சொன்னால் அதிகம்பேரை சென்றடையும் என்பதால் நடிகர் விஜயை இயக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

    இயக்குநர் சேரன்  விஜய் சேதுபதிக்கு கதை சொல்லியிருப்பதாகவும், விரைவில் அவரது படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பிரதமர் மோடியை தீவிரவாதி என விமர்சித்த விஜயசாந்தி - வீடியோ

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Director cheran

    அடுத்த செய்தி