ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முதலமைச்சர் பயோபிக்கில் நடிக்க ரெடி - சூர்யா

முதலமைச்சர் பயோபிக்கில் நடிக்க ரெடி - சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

“சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் சூரரைப் போற்று படம் முழுமையான வாழ்க்கை வரலாற்றுப் படமல்ல” - சூர்யா

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை திரைப்படமாக உருவானால் அந்தப் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

  ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை வெளியானது. மொத்தமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் 151 இடங்களைப் பிடித்து ஒய்.எஸ்.ஆர் கட்சி வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இதுவரை சந்தித்திராத மாபெரும் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து ஆந்திராவின் முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

  இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கையை படமாக எடுத்தால், அந்தப் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

  இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் நடிகர் சூர்யா, “சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் சூரரைப் போற்று படம் முழுமையான வாழ்க்கை வரலாற்றுப் படமல்ல. கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் பணிகளில் ஊக்கமடைந்து, அந்தக் கதையைத் திரைப்படத்துக்கு ஏற்றவாறு மாற்ற விரும்பினோம். ஆயுத எழுத்து படக் காலத்திலிருந்து சுதா கொங்கராவை எனக்குத் தெரியும். அவருடன் நட்பு உண்டு. அவர் என்னுடைய ராக்கி சகோதரி. அவருடைய திறமை மீது எனக்கு அதிக மதிப்பு உண்டு. சூரரைப் போற்று படத்தைத் தொடங்க அவர் 3 ஆண்டுகள் காத்திருந்தார்.

  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகும்போது, அப்படத்தை இயக்குபவர்கள் நல்ல கதை, திரைக்கதையுடன் என்னை தொடர்பு கொண்டால், ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவேன்” என்று கூறியுள்ளார்.

  வீடியோ: கவுண்டமணி வாழ்க்கைக் கதை!

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actor Suriya