ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அமெரிக்க அதிபர் ட்ரம்பை பேட்டி எடுக்கிறாரா நடிகர் சித்தார்த்?

அமெரிக்க அதிபர் ட்ரம்பை பேட்டி எடுக்கிறாரா நடிகர் சித்தார்த்?

நடிகர் சித்தார்த் சினிமா மட்டுமின்றி சமூக பிரச்னைகள் மற்றும் அரசியல் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருவார்

நடிகர் சித்தார்த் சினிமா மட்டுமின்றி சமூக பிரச்னைகள் மற்றும் அரசியல் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருவார்

நடிகர் சித்தார்த் சினிமா மட்டுமின்றி சமூக பிரச்னைகள் மற்றும் அரசியல் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருவார்

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பேட்டி எடுக்க வேண்டும் என்று நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

  தமிழில் பாய்ஸ், அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சித்தார்த். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சித்தார்த் சினிமா மட்டுமின்றி சமூக பிரச்னைகள் மற்றும் அரசியல் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருவார். அந்த கருத்துகள் சர்ச்சைக்கு வழிவகுக்கும். தற்போதும் அதேபோல் அவர் செய்த ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ டொனால்ட் ட்ரம்ப் அவர்களே, நீங்கள் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருவதால் எனக்கு நீங்கள் ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள், நீங்கள் எப்படி தூங்குவீர்கள், உங்களுடைய அழகின் ரகசியம் என்ன என்பது குறித்து நிறைய கேள்விகள் என்னிடம் இருக்கிறது. என்னிடம் இந்திய பாஸ்ப்போர்ட் இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

  அவருடைய பதிவுக்கு பலரும் நீங்கள் நடிகர் அக்‌ஷய் குமாரை டேக் செய்ய மறந்துவிட்டீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

  ஆம் சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், பிரதமர் மோடியை பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் அரசியல் பற்றி எதுவும் பேசாமல், அவரது சொந்த வாழ்க்கை மற்றும் கருத்துக்கள் பற்றி பேசியிருந்தார்.

  அக்‌ஷய் குமார் நேர்காணலில் மோடி

  இதை கலாய்க்கும் விதமாக நடிகர் சித்தார்த் இந்த பதிவை பதிவிட்டிருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  Also watch

  Published by:Prabhu Venkat
  First published:

  Tags: Actor Siddharth, Donald Trump