பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழில் அனேகன் படத்தில் நடித்த அமைரா தஸ்தூரும் தனக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக பெண்கள் மீது நடைபெறும் பாலியல் குற்றங்கள அதிகமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. பத்திரிகை, சினிமா உள்ளிட்ட பல துறைகளில் உள்ள பெண்களும் சமூக வலைதளங்களில் #MeToo என்ற ஹேஷ்டாக் மூலம் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை தெரிவித்து வருகின்றனர்.
பாடகி சின்மயி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு சிறு வயதில் இருந்து தனது உறவினர்களால் ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்தும், பணியிடங்களில் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்தும் அவர் பதிவிட்டு வந்தார். அதனை தொடர்ந்து சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். அதற்கு வைரமுத்துவும் மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் அனேகன் படத்தில் ஹீரோயினாக நடித்த அமைரா தஸ்தூரும் தனக்கு பாலியல் ரீதியாக சீண்டல்கல் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்த அவர், கே.வி.ஆனந்த இயக்கத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக அனேகன் படத்திலும் நடித்துள்ளார்.
தென்னிந்திய படம் ஒன்றில் பாடல் காட்சியில் நடிக்கும் போது படத்தின் நாயகன் தன்னை இருக்கமாக கட்டியணைத்ததாகவும், தனது காது அருகில் வந்து உன்னுடன் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்ததாகவும் அவர் கூறினார். தொடர்ந்து அதனால் மனதளவில் பாதிப்பை அடைந்த அமைரா, அந்த படத்தின் ஷூட்டிங் போது குறிப்பிட்ட அந்த நடிகருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், இதனால் கோபமடைந்த அந்த நடிகரும், இயக்குனரும் ஷூட்டிங் நேரத்தில் தன்னை பல மணி நேரம் காக்க வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த நடிகர் யார் என்ற கேள்விக்கும் நடிகை அமைரா பதிலளிக்க மறுத்துவிட்டார். பின்னர் அந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த உடன் தன்னை அந்த நடிகரிடம் மன்னிப்பு கேட்க இயக்குனர் வற்புறுத்தியதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.