முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / முன்னணி இயக்குநர் மீது விஜய் பட ஒளிப்பதிவாளர் திடீர் குற்றச்சாட்டு

முன்னணி இயக்குநர் மீது விஜய் பட ஒளிப்பதிவாளர் திடீர் குற்றச்சாட்டு

நடிகர் விஜய்யுடன் ஒளிப்பதிவாளர் நட்ராஜ்

நடிகர் விஜய்யுடன் ஒளிப்பதிவாளர் நட்ராஜ்

இயக்குநர் சுசீந்திரன் மற்றும் அவரது மேனேஜர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நடராஜ் கூறியுள்ளார்.

  • Last Updated :

இயக்குநர் சுசீந்திரன் மற்றும் அவரது மேனேஜர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நடராஜ் கூறியுள்ளார்.

இந்திய திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் நட்ராஜ். சதுரங்க வேட்டை, மிளகாய் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ஜீவா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். விஜய் நடித்த புலி உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், என் வாழ்க்கையின்... ஜீவா படத்தில் பாடலுக்கு நடித்தது... தவறான முயற்சி... காரணம், சுசீந்திரன் இயக்குநர். சுசீந்திரன் மற்றும் அவரது மேனேஜர் என்னை ஏமாற்றிவிட்டனர் என்று ட்வீட் செய்துள்ளார்.

முன்னணி இயக்குநர் சுசீந்திரன் குறித்து நட்ராஜ் வெளியிட்ட இந்தப் பதிவு பெரும் திரைத்துறையில் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது.

எதற்காக அவர் இப்படி கருத்து பதிவிட்டார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. ஜீவா படத்தில் அவர் நடித்தபோது இயக்குநர் சுசீந்திரனுக்கும் அவருக்கும் ஏதாவது நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மன்னிப்பு கேட்க முடியாது... குமாரசாமி அதிரடி - வீடியோ

First published:

Tags: Actor Natraj, Director suseenthiran