ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

`தனுஸ்ரீக்கு என் மகள் வயது’ - நானா படேகர் உருக்கம்!

`தனுஸ்ரீக்கு என் மகள் வயது’ - நானா படேகர் உருக்கம்!

தனுஸ்ரீ தத்தா| நானா படேகர்

தனுஸ்ரீ தத்தா| நானா படேகர்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள நானாபடேகர் தனுஸ்ரீ தன் மகள் வயதுடையவர் என்று  பதிலளித்துள்ளார்.

  காலா படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர் நானா படேகர். தமிழில் பொம்மலாட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவர் புதிது என்றாலும், பாலிவுட்டில் பிரபலமான நடிகர். மத்திய அரசால் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். தற்போது இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருப்பவர் முன்னாள் மிஸ் இந்தியாவும், பாலிவுட் நடிகையுமான தனுஸ்ரீ தத்தா. தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்த தனுஸ்ரீ தத்தா தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

  இவர் தற்போது நானா படேகர் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று தனியார் தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அதில், கடந்த 2008- ம் ஆண்டு `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, தகாத இடங்களில் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.

  இந்தக் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த நானா படேகர், ``நான் 2008 –ம் ஆண்டே இந்த சர்ச்சைக்கு பதிலளித்துவிட்டேன்” என்று கூறினார். தனுஸ்ரீ தன் மகள் வயதுடையவர்  என்றும் விளக்கமளித்துள்ளார். திரைத்துறையில் 35 ஆண்டுகாலத்தில் யாரும் தன்னை குற்றம் சாட்டியதில்லை என்றவர், தன் மீது குற்றம்சாட்ட தனுஸ்ரீயை தூண்டியது யார் என்பது தனக்கு தெரியவில்லை என்றும் பதிலளித்தார்.

  Published by:Saroja
  First published:

  Tags: Nana Patekar, Nana patekar explains, Sexual issues, Thanu sri dutta