• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • `மக்கள் பிரதிநிதியாகும் ஆசை இல்லை!’ - கலைமாமணி விருது பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன்

`மக்கள் பிரதிநிதியாகும் ஆசை இல்லை!’ - கலைமாமணி விருது பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் வழியாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்து பேசியுள்ளார்.

  • Share this:
    தமிழக அரசானது திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருதளித்து சிறப்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில் 2019 மற்றும் 2020-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வாங்கும் திரைப் பிரபலங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழின் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயனும் ஒருவர். திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் வழியாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்து பேசியுள்ளார்.

    நடிகர் சிவகார்த்திகேயன் விருது தொடர்பாக பேசும்போது, `கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இன்னும் அதிகமான நல்ல படங்களை நடிக்க வேண்டும். அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் வேண்டும். கோட்டைக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு குழந்தை இந்த இடத்தை பார்க்கிற போது ஏற்படுகிற பிரம்மிப்பு எனக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, மக்கள் பிரதிநிதியாக வர வேண்டும் ஆசை இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், `அதற்கு ஆசை இல்லை... ஆனால் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இன்னும் என்னுடைய திறமையை அதிகபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ram Sankar
    First published: